Home /News /international /

மகனை பார்க்க போனால் கார் கேரேஜில் தான் தங்கி தூங்குவேன்.. உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரின் தாய் தகவல்

மகனை பார்க்க போனால் கார் கேரேஜில் தான் தங்கி தூங்குவேன்.. உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரின் தாய் தகவல்

எலான் மஸ்க்குடன் அவர் தாய் மயி மஸ்க்

எலான் மஸ்க்குடன் அவர் தாய் மயி மஸ்க்

எலான் மஸ்கை பார்கப்போகும் போது அவர் கார் நிறுத்தும் கேரேஜில் தான் நான் தங்கி உறங்குவேன் என அவரது தாய் மயி மஸ்க் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaTexasTexas
    உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் எலான் மஸ்க். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் சிஇஓவான எலான் மஸ்க், அன்மையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்து அனைவரையும் அதிர வைத்தார். உலகின் நம்பர் 1 பணக்காரரான இவரின் தாய் மயி மஸ்க் தி சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகைக்கு அன்மையில் போட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் அளித்த சுவாரசிய தகவல் இணையப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

    அவர் தனது பேட்டியில், உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரனாக எனது மகன் இருந்தாலும், அவனுக்கு பொருள் சேர்த்துக்கொள்வதில் பெரிய நாட்டமில்லை. சொல்லப்போனால் டெக்சாஸில் அவனை பார்கப்போகும் போது அவன் கார் நிறுத்தும் கேரேஜில் தான் நான் தங்கி உறங்குவேன். ராக்கெட் விடும் இடத்தில் அழகான சொகுசான வீட்டை எல்லாம் எதிர்பார்க்க முடியாது என்றார்.

    மேலும், உங்கள் மகன் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல வேண்டும் என்கிறாரே அதில் உங்களுக்கு என்ற கேள்விக்கு, "எலான் மஸ்க் போல எனக்கு செவ்வாய் கிரகம் செல்ல தனக்கு தனிப்பட்ட முறையில் விருப்பம் எல்லாம் இல்லை.

    இதற்கு ஆறு மாதம் தனியாக இருக்க வேண்டுமாம். இது எனக்கு கடினம். இருந்தாலும் எனது குழந்தைகள் விரும்பினால் அதை நான் செய்யத் தயார்" என்றுள்ளார் மயி மஸ்க்.

    இதையும் படிங்க: ஐரோப்பாவில் மிகப்பெரிய டைனோசரின் எலும்புகள் கண்டெடுப்பு..! - 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் என தகவல்

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எலான் மஸ்க் ஒரு பேட்டியில், தன்னிடம் சொந்தமாக வீடு போன்ற சொத்துக்கள் இல்லை. சிலிக்கான் வேலி வந்தால் நண்பர்கள் வீடுகள் அல்லது அறைகளில் தான் தங்கிக்கொள்வேன். எனது சொத்துக்களை எல்லாம் விற்றுவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. சொத்துக்கள் உங்கள் கீழே தான் இழுக்கும் என்று கூறினார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Elon Musk

    அடுத்த செய்தி