டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்கிடம், சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவது தொடர்பாக எலான் மஸ்க் மற்றும் ட்விட்டர் நிறுவனம் தரப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது. போலி கணக்குகள் தொடர்பான விவரங்களை எலான் கேட்ட நிலையில், அதை ட்விட்டர் நிறுவனம் வழங்க மறுத்ததால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இதை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் மீது தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் மிகப்பெரும் ஒப்பந்தம் தொடர்பாக, எலான் மஸ்கிடம், சட்ட அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக டெலாவர் சான்சேரி (delaware chancery) நீதிமன்றத்தில், ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விவரங்களை தருமாறு எலான் மஸ்க் தரப்பிடம் பலமுறை கேட்டும், இன்னும் வழங்கவில்லை எனவும் ட்விட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை முழுமையாக வாங்க டீல் பேசினார் எலான் மஸ்க். நிறுவனத்துடன் நடத்திய டீலில் அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு எலான் மஸ்க் வாங்குகிறேன் என அறிவித்தார். இந்திய ரூபாயின் மதிப்பின் படி இந்த தொகை மூன்று லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாகும். ஆனால் சில வாரங்களிலேயே, ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்து உண்மையான தரவுகளை பொதுவெளியில் ஆதாரத்துடன் வழங்காத வரை ட்விட்டர் ஒப்பந்தம் முன்னோக்கி நகராது என எலான் மஸ்க் தெரிவித்து ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்கினார்.
இதையும் படிங்க: வறுமையின் பிடியில் 1 கோடி பேர்..3 ஆண்டுகளில் கதி கலங்கி நிற்கும் இலங்கை!
தனது கோரிக்கையை ட்விட்டர் நிறுவனம் நிறைவேற்றாததால், ஒப்பந்தத்தை கைவிடுகிறேன் என ஜூலை மாதம் எலான் மஸ்க் அறிவித்தார். ஆனால், எலான் மஸ்க் இந்த ஒப்பந்தத்தில் இருந்து இன்னும் வெளியேறவில்லை. இந்த ஒப்பந்தம் இவ்வாறு இழுத்தடிப்பதால் ட்விட்டரில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த ஐந்து மாதங்களாக பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.