ஹோம் /நியூஸ் /உலகம் /

ட்விட்டருக்கு கட்டணம் செலுத்துங்க.... இல்லனா இந்த வசதிகளை பயன்படுத்த முடியாது - மீண்டும் எலான் மஸ்க் அதிரடி

ட்விட்டருக்கு கட்டணம் செலுத்துங்க.... இல்லனா இந்த வசதிகளை பயன்படுத்த முடியாது - மீண்டும் எலான் மஸ்க் அதிரடி

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இந்த கொள்கைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ட்விட்டர் நிறுவனத்தின் தலைவராக எலான் மஸ்க் பதவியேற்ற உடன் அதிரடியான பல மாற்றங்களை கொண்டுவந்தார். குறிப்பாக புளூ டிக் தொடர்பாக அவர் கொண்டுவந்த மாற்றம் நீண்ட நாள் ட்விட்டர் பயனாளர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. முதலில் புளு டிக் வேண்டுமானால் அதற்கு கட்டாயமாக சந்தா செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த தற்காலிகமாக திரும்ப பெற்றார்.

இந்த நிலையில் தனி நபர், நிறுவனங்கள் என வெவ்வேறு நிறங்களுடன் புளூ டிக் மீண்டும் வழங்கப்பட்டது. அதன்படி புளு டிக் தனிபர் கணக்கை குறிக்கிறது. கோல்டு டிக்கானது வணிக நிறுவனங்களையும், கிரே டிக்கானது அரசாங்கங்கள் தொடர்பான கணக்கை குறிக்கிறது. ப்ளு டிக் பெறுவதற்கு 8 டாலர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் நிறுவனம் ஒரு பதிவிட்டிருந்தது. அதில் சமூக வலைதளங்களை இலவசமாக ப்ரமோட் செய்வது போன்ற எந்த நடவடிக்கைகளையும் இனி ட்விட்டர் ஏற்றுக்கொள்ளாது. ட்விட்டரை பயன்படுத்துபவர்கள் மற்ற சமூக வலைதளங்களின் லிங்க்கை ட்விட்டரில் போஸ்ட் செய்வது போன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன எனவும் இந்த கொள்கைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இதற்கும் எதிர்ப்புகள் கிளம்ப உடனடியாக தனது புதிய கொள்கைகளை திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்தது.

இந்த நிலையில் விரைவில் புதிய மாற்றம் கொண்டுவரவுள்ளதாக எலான் மாஸ்க் அறிவித்துள்ளார். அதில் ப்ளூ டிக்கிற்கு மாதம் ரூ.660 கட்டணம் எனவும் கட்டணம் செலுத்தபவர்களுக்கு நீண்ட நேர வீடியோ மற்றும் ஆடியோக்களை பதிவிடும் வசதி கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளார்..

First published:

Tags: Elon Musk, Twitter