Home /News /international /

ரூ.21 லட்சம் கோடி சொத்து: ஆனா சொந்தமா வீடு இல்லை - சொல்கிறார் உலகின் நம்.1 பணக்காரர் எலான் மஸ்க்

ரூ.21 லட்சம் கோடி சொத்து: ஆனா சொந்தமா வீடு இல்லை - சொல்கிறார் உலகின் நம்.1 பணக்காரர் எலான் மஸ்க்

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தன்னிடம் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தன்னிடம் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் தன்னிடம் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    உலகின் நம்பர் 1 பணக்காரர் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓவான எலான் மஸ்க். இவர் தன்னிடம் சொந்தமாக வீடு ஏதும் இல்லை, நண்பர்கள் வீட்டில் தான் தங்கி வாழ்கிறேன் என TED ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    போர்ப்ஸ் நாளிதழின் படி எலான் மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு 269.5 பில்லியன் டாலராகும். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பு படி 21 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு உள்ளது. அண்மையில் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரின் 9.1 சதவீத பங்குகளை வாங்கிய எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 3.2 லட்சம் கோடிக்கு முழுமையாக வாங்க பேரம் பேசி அனைவரையும் அதிர வைத்தார்.

    இந்நிலையில், TED நிறுவனத்திற்கு வீடியோ பேட்டி அளித்த எலான் மஸ்க், நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில், தன்னிடம் வீடு ஏதும் இல்லை எனவும், தனது நண்பர்களின் வீடுகளில் உள்ள காலி பெட்ரூமில் தான் தங்கிக்கொள்கிறேன் என்றார். அவர் தனது பேட்டியில், " என்னிடம் சொகுசு கப்பல் ஏதும் இல்லை. நான் நீண்ட கால விடுமுறைகள் எடுத்துக்கொள்வதில்லை. என்னுடைய சொந்த தேவைக்காக ஒரு போதும் கோடிக்கணக்கான ரூபாயை செலவிட்டதில்லை.

    நான் விமானத்தில் பறந்து செல்கிறேனே. அது செலவில்லையா என கேட்பார்கள். நான் விமானத்தில் செல்லவில்லை என்றால் எனது நேரம் விரயமாகிப்போகும். நீண்ட காலம் என்னால் வேலையில் ஈடுபட முடியாது" என கூறியுள்ளார். நீங்களும் உங்களைப் போன்ற பணக்காரர்களும் அளவுக்கு அதிகமா சொத்து மதிப்பு கொண்டுள்ளதாக பலரும் விமர்சிப்பதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு மஸ்க், இது போன்ற கருத்துக்களை நான் ஒரு பொருட்டாகவே தான் மதிப்பதில்லை என்றார்.

    இதையும் படிங்க: TCS, Infosys-ஐ விட்டு வெளியேறும் ஊழியர்கள் - காரணம் இது தான்! 

    தான் சாதாரண வாழ்க்கை வாழ்வதாக எலான் மஸ்க் பொது வெளியில் காட்டிக் கொள்வது இது முதல் முறை அல்ல. எலான் மஸ்க் தங்குவதற்கு இடமில்லை எனக் கூறி சில முறை தனது வீட்டில் வந்து தங்க அனுமதி கேட்டுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், முன்னாள் சிஇஓவான லாரி பேஜ் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதேபோல், எலான் மஸ்க்கின் தோழியான பிரபல பாப் பாடகி கிரைம்ஸ், வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் நபரைப் போல் எலான் மஸ்க் வாழ்வதாகவும், வீட்டின் தரை மடிப்பு சேதமடைந்து ஓட்டை ஆனால் கூட அதை மாற்ற மாட்டேன் எலான் மஸ்க் கூறியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Elon Musk

    அடுத்த செய்தி