ஹோம் /நியூஸ் /உலகம் /

நான் ஒரு வேற்றுக்கிரக வாசி... தினமும் விமர்சியுங்கள்... ஆனால் 8 டாலர் செலுத்துங்கள்: எலான் மஸ்க்

நான் ஒரு வேற்றுக்கிரக வாசி... தினமும் விமர்சியுங்கள்... ஆனால் 8 டாலர் செலுத்துங்கள்: எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், ஆனால் கண்டிப்பாக இனி டிவிட்டரின் கணக்கு 8 டாலர் தான் என்று எலான் மஸ்க் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • internat, IndiaSan FranciscoSan FranciscoSan Francisco

    டிவிட்டரின் புதிய தலைவர் எலான் மஸ்க் தான் ஒரு வேற்றுக்கிரக வாசி என்றும் யார் என்ன சொன்னாலும் இனி டிவிட்டரில் ப்ளூ டிக் கணக்கு வைத்துள்ளோருக்கு மாதம் 8 டாலர் தான் என்று தெரிவித்துள்ளார்.

    உலகின் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டிவிட்டரை வாங்கியதில் இருந்து தினமும் செய்தி பொருளாகவே மாறியுள்ளார். கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் முக்கிய சமூக வலைத்தளமான டிவிட்டரில் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு ப்ளூ டிக் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், எலான் மஸ்க் உரிமையை வாங்கிய பின் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு மாதம் 8 டாலர் வசூலிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு டிவிட்டரில் பலமான எதிர்ப்புக்கள் கிளம்பியது.

    அப்படி, எழுத்தாளர் டிம் அர்மன் என்ற நபர் எலான் மஸ்க்கிடம், விந்தையான சதி கோட்பாடுகளில் நீங்கள் உண்மை என்று நினைப்பது என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு எலான் மஸ்க் ”நான் ஒரு ஏலியன், என்னுடைய சொந்த கிரகத்திற்குச் செல்ல முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன்” என்று கூறினார்.

    தொடர்ந்து எழுத்தாளர், நீங்கள் இதைப் பற்றி பொது வெளியில் பேச மாட்டீர்கள் என்று நினைத்தேன் என்று பதிவிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த எலான், மறுத்தாலும் அல்லது ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் நான் ஒரு ஏலியன் என்பதினால் நான் ஒரு ஏலியன் தான் என்று கூறியுள்ளார்.

    Also Read : 23000 கிலோ எடையுடைய சீனாவின் ராக்கெட் உதிரிப்பாகங்கள் பூமியில் விழுந்தது - எங்குத் தெரியுமா?

    இதனைத் தொடர்ந்து,   ‘என்னை தினமும் தூற்றுங்கள் ஆனால் அதற்கு 8 டாலர் கட்டணம்’ என்று அழுத்தமாகக் கூறியுள்ளார். மேலும் டிவிட்டரின் 50 % ஊழியர்களை வேலையில் இருந்து தூக்கியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

    Published by:Janvi
    First published:

    Tags: Elon Musk, Twitter