ஹோம் /நியூஸ் /உலகம் /

ட்விட்டர் நிறுவனத்தில் 75 சதவீத ஊழியர்கள் பணி நீக்கம்? - எலன் மஸ்க் விளக்கம்!

ட்விட்டர் நிறுவனத்தில் 75 சதவீத ஊழியர்கள் பணி நீக்கம்? - எலன் மஸ்க் விளக்கம்!

ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்

ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தை விட்டு 75 சதவீத ஊழியர்களை வேலையேற்றப் போவதாக வந்த செய்தி குறித்து ட்விட்டர் பயனாளர் ஒருவர், எழுப்பிய கேள்விக்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • int, IndiaSan FranciscoSan Francisco

  உலகின் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தியுள்ளார்.

  பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை முழுமையாக வாங்க விரும்புவதாக எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து நிறுவனத்துடன் நடத்திய டீலில் அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பின் படி இந்த தொகை மூன்று லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாகும்.

  ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் சென்ற உடனே, அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பிராக் அகர்வால்(CEO), தலைமை நிதி அதிகாரி (CFO) நெட் செகல், தலைமை சட்ட அதிகாரி(CLO) விஜாய கட்டே உள்ளிட்டோரை நிறுவனத்தை விட்டு எலான் வெளியேற்றியுள்ளார்.

  அதேபோல், விரைவில் நிறுவனத்தின் 75 சதவீத ஊழியர்களை அவர் நீக்கவுள்ளார் என்ற பரபரப்பு தகவல் பரவி வருகிறது. ட்விட்டர் நிறுவனத்தில் தற்போது 7 ஆயிரத்து 500 பேர் பணியாற்றும் நிலையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் வருவாயை அடுத்த 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக சம்பள செலவை குறைக்கவே இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

  இதையும் படிங்க: சோமாலியாவில் சக்தி வாய்ந்த இரட்டை கார் குண்டுவெடிப்பு- ஊடகவியலாளர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பலி!

  இந்நிலையில் இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார். ட்விட்டர் பயனாளர், ஒருவர் மேற்கொண்ட பணிநீக்க தகவல் தொடர்பாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தியை பகிர்ந்து இது உண்மையா என எலான் மஸ்க் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு எலான் மஸ்க் இது உண்மை அல்ல என பதில் அளித்துள்ளார்.

  ட்விட்டர் நிறுனவத்தில் எலான் மஸ்க் தலைமையில் வரப்போகும் மாற்றங்கள் குறித்து தெளிவான பார்வை அடுத்த சில வாரங்களில் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Elon Musk, Jobs, Twitter