ஹோம் /நியூஸ் /உலகம் /

75 % ஊழியர்களை பணிநீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டம் - அதிர்ச்சி தகவலால் ட்விட்டர் ஊழியர்கள் கலக்கம்

75 % ஊழியர்களை பணிநீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டம் - அதிர்ச்சி தகவலால் ட்விட்டர் ஊழியர்கள் கலக்கம்

ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் பீதியை கிளப்பும் எலான் மஸ்க்

ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் பீதியை கிளப்பும் எலான் மஸ்க்

எலான் மஸ்க் கைக்கு ட்விட்டர் நிறுவனம் சென்றதும் அந்நிறுவனத்தின் முக்கால்வாசி பேர் அதாவது 75 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaWashingtonWashington

  உலகின் முன்னணி பணக்காரரான தொழிலதிபர் எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை முழுமையாக வாங்குவதாக அறிவித்தார். நிறுவனத்துடன் நடத்திய டீலில் அந்நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக அவர் அறிவித்தார். இந்திய ரூபாயின் மதிப்பின் படி இந்த தொகை மூன்று லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாகும்.

  ஒப்பந்தம் போட்ட சில வாரங்களில் அதில் இருந்து வெளியேறுவதாக கூறிய மஸ்க், தற்போது மீண்டும் ட்விட்டரை வாங்கும் பணியில் மும்முரமாக செயல்படுகிறார்.இந்த ஒப்பந்தம் விரைவில் நிறைவுபெற்று ட்விட்டரின் உரிமையாளராக எலான் மஸ்க் வரப்போகும் நிலையில், தனது என்டரிக்கு முன்னரே ஊழியர்களுக்கு பேரதிர்ச்சியை மஸ்க் தந்துள்ளார். எலான் மஸ்க் கைக்கு ட்விட்டர் நிறுவனம் சென்றதும் அந்நிறுவனத்தின் முக்கால்வாசி பேர் அதாவது 75 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  ஊழியர்களின் சம்பள செலவை குறைத்து வருவாயை பெருக்கும் திட்டத்தை எலான் மஸ்க் மேற்கொள்ளவுள்ளார் எனவும், அதனால் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை 7,500இல் இருந்து 2,000ஆக குறைக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ட்விட்டரில் பணிபுரியும் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். அதேவேளை இந்த முடிவு அதிகாரப்பூர்வமானது இல்லை எனவும், சிறப்பாக செயல்படும் ஊழியர்கள் கவலைப்பட வேண்டாம் என நிறுவன தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இதையும் படிங்க: தொடரும் அதிர்ச்சி! - 99 குழந்தைகள் பலி.. இருமல் சிரப்புகளுக்கு தடை விதித்த இந்தோனேசியா!

  சில மாதங்களாகவே முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்கள் பணிக்கு ஆட்கள் எடுப்பதை குறைத்துக்கொண்டுள்ளன. அத்துடன் உலகின் முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய நிறுவனங்கள் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன என்ற தகவல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. குறிப்பாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தனது 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்தது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Elon Musk, Jobs, Twitter, Unemployment