உலகின் மிகபெரும் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் சமூக ஊடகத்தை வாங்க விலை பேசிவரும் நிலையில், பொருளாதார மந்த நிலையில் உள்ள இலங்கையை அவர் வாங்க வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலக பணக்காரர் வரிசையில் முதல் இடத்தில் உள்ளார். இவர் அண்மையில் ட்விட்டரின் 9.2 சதவீத பங்குகளை வாங்கினார்.
போர்டு மெம்பராக இருக்கும் அவர் அதிகபட்சமாக 14.9 சதவீத பங்குகளை மட்டுமே வாங்க முடியும். இதை வைத்துக் கொண்டு ட்விட்டரின் நிர்வாக முடிவுகளில் எலோன் மஸ்க்கால் ஆளுமை செலுத்த முடியாது.
இந்நிலையில் ட்விட்டர் நிர்வாக வாரிய தலைவர் பிராட் டெய்லருக்கு நேற்று மஸ்க் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ''உலகம் முழுவதும் சுதந்திரமான பேச்சுக்கான தளமாக இருக்கும் என்று நான் நம்புவதால், ட்விட்டரில் முதலீடு செய்தேன். ஜனநாயகத்திற்கு பேச்சு சுதந்திரம் அவசிய தேவை என்று நான் நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ரூ. 3.2 லட்சம் கோடிக்கு ட்விட்டரை விலைக்கு கேட்கும் எலோன் மஸ்க்... ஆடிப்போனது நிர்வாகம்
தொடர்ந்து ட்விட்டருக்கு ரூ. 3.2 லட்சம் கோடியை நிர்ணயித்துள்ள எலோன் மஸ்க், தனது இந்த ஆஃபர் இறுதியானது என்று குறிப்பிட்டுள்ளார். இதனை ஏற்காவிட்டால் பங்குதாரராக தனது நிலையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதாக அறிவித்ததையடுத்து, பலரும் அவர் இலங்கையை வாங்க வேண்டும் என்று விருப்பதை தெரிவித்து வருகின்றனர். 43 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக 45 பில்லியன் டாலர் கடனில் இருக்கும் இலங்கையை மஸ்க் வாங்க வேண்டும் என்றும் தனது பெயரை Ceylon Musk என்று அழைத்துகொள்ளட்டும் என்று snapdeal சி.இ.ஓ. குனால் பாஹில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிங்க: விண்வெளியின் விளிம்பு வரை செல்ல அரிய வாய்ப்பு.. ராட்சத பலூனில் ஒருமுறை சுற்ற எவ்வளவு செலவு தெரியுமா?
இதேபோல் மற்றொரு பயனர், ‘ எலான் மஸ்க், நீங்கள் எதையாவது வாங்க வேண்டும் என்று நினைத்தால் இலங்கையை வாங்குங்கள், ட்விட்டரை விட்டுவிடுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனரோ, ‘OMG, @elonmusk ட்விட்டரை $43 பில்லியனுக்கு வாங்க முடிவு செய்துள்ளாரா. தயவு செய்து யாராவது அவரிடம் சொல்லுங்கள், அவர் இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவை 45 பில்லியன் டாலர்களுக்கு வாங்கலாம், அதனை ராக்கெட் அனுப்ப அவர் பயன்படுத்தலாம்’ என்று கூறியுள்ளார். இதேபோல், பலரும் எலான் மஸ்க் இலங்கையை வாங்க வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.