உலகின் முன்னணி தொழிலதிபராக இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா மோட்டார், ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் உரிமையாளாரகவும் சிஇஓவாகவும் இவர் உள்ளார். அத்துடன் பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார். இது இந்திய மதிப்பின் படி ரூ.3.30 லட்சம் கோடி ஆகும்.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்தே அவரை சுற்றி சர்ச்சைகளும் களேபரங்களும் பரவத் தொடங்கின. டெஸ்லாவில் முதலீடு செய்தவர்களுக்கு எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது. எலான் மஸ்க்கின் கவனம் ட்விட்டர் பக்கம் சென்றால் டெஸ்லாவின் வளர்ச்சி பாதிக்கப்படும் என டெல்ஸா முதலீட்டாளர்கள் கருதினர்.
இருப்பினும், அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி அதில் தொடர்ச்சியான மாற்றங்களை செய்து வருகிறார். இதனால் டெஸ்லா முதலீட்டாளர்கள் பின் வாங்கத் தொடங்கினர். எனவே, 2022இல் மட்டும் டெஸ்லா நிறுவனத்தின் 65 சதவீத பங்குகள் சரிவை கண்டன. இதன் காரணமாக எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 200 பில்லியன் டாலர் வீழ்ச்சி கண்டது. இந்திய மதிப்பின் படி இது சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் அதிக சொத்தை இழந்த நபர் என்ற கின்னஸ் சாதனையை எலான் மஸ்க் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: கறுப்பு நிறம், நிராகரிப்புகள்...தடைகளை தகர்த்து 70 வயதிலும் சூப்பர் மாடலாக அசத்தும் 4 பேரக் குழந்தைகளின் பாட்டி!
இதற்கு முன்பு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மசயோஷி சன் என்ற நபர் தான் ஓராண்டில் அதிக சொத்துக்களை இழந்தவர் என் கின்னஸ் சாதனையை வைத்திருந்தார். இவர் 2000ஆம் ஆண்டில் 58.6 பில்லியன் டாலர் சொத்துக்களை இழந்தார். இந்த மாற்றத்திற்கு பின்னரும் எலான் மஸ்க் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக நீடிக்கிறார். இவரிடம் தற்போது 144 பில்லியன் டாலர் சொத்து உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.