ஹோம் /நியூஸ் /உலகம் /

பணத்தை இழப்பதில் புதிய சாதனை படைத்த எலான் மஸ்க்! - எவ்வளவு தொகை தெரியுமா?

பணத்தை இழப்பதில் புதிய சாதனை படைத்த எலான் மஸ்க்! - எவ்வளவு தொகை தெரியுமா?

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

கடந்த சில வாரங்களாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 11 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaAmericaAmericaAmerica

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக உள்ள எலான் மஸ்க் இந்திய மதிப்பில் 16 லட்சம் கோடி ரூபாயை இழந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, நியூரோலிங், பேபால் உள்ளிட்ட பெரு நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 2021-ம் ஆண்டு நவம்பரில் 28 லட்சம் கோடியாக அதிகரித்தது. இதன்மூலம் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக உருவெடுத்தார்.

ஆனால், ட்விட்டரை நிறுவனத்தை கையகப்படுத்துவதற்காக தனது டெஸ்லா நிறுவன பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்தார். அதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 11 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. அதிகபட்சமாக இந்திய மதிப்பில் 16 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்த எலான் மஸ்க், இவ்வளவு பெரிய தொகையை இழந்த முதல் மனிதராக புதிய சாதனை படைத்துள்ளார்.

First published:

Tags: Elon Musk, Twitter