Home /News /international /

1.4 ட்ரில்லியன் டாலர் இழப்பு: 6 மாதங்களில் பல லட்சம் கோடியை இழந்த கோடீஸ்வரர்கள்

1.4 ட்ரில்லியன் டாலர் இழப்பு: 6 மாதங்களில் பல லட்சம் கோடியை இழந்த கோடீஸ்வரர்கள்

1.4 ட்ரில்லியன் டாலர் இழப்பு

1.4 ட்ரில்லியன் டாலர் இழப்பு

ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் டெஸ்லா நிறுவனம் மோசமான நிலையில் இருந்தது. அமேசான் நிறுவனமும் கடும் பாதிப்பை சந்தித்தது. 

    எலன் மஸ்க், ஜெஃப் பெசோஸ், மார்க் ஜூக்கர்பெர்க்  உட்பட  உலகின் முன்னணி 500 கோடீஸ்வரர்கள் 2022ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 1.4 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளனர்.

    எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட $62 பில்லியன் சரிந்தது. ஜெஃப் பெசோஸ் தனது சொத்து மதிப்பு சுமார் 63 பில்லியன் டாலர்கள் சரிந்ததைக் கண்டார். மார்க் ஜுக்கர்பெர்க்கின் நிகர மதிப்பு பாதிக்கு மேல் குறைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் உலகின் 500 பணக்காரர்கள் $1.4 டிரில்லியன் டாலர்களை இழந்துள்ளனர்.

    கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து அரசாங்கங்களும் மத்திய வங்கிகளும் எடுத்த முன்னோடியில்லாத நடவடிக்கைகள் காரணமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் கிரிப்டோகரன்சிகள் வரை அனைத்தின் மதிப்பும் குறைந்துபோனது. தற்போது பண வீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வரும் சூழலில், உயர் மதிப்புடைய பங்குகள் மற்றும் அவற்றை வைத்துள்ளவர்கள் மதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

    இதையும் படிக்க: 110 நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - அலட்சியம் வேண்டாம் WHO எச்சரிக்கை

    ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் டெஸ்லா நிறுவனம் மோசமான நிலையில் இருந்தது. அமேசான் நிறுவனமும் கடும் பாதிப்பை சந்தித்தது. உலகின் மிகப் பெரிய பணக்காரர்களுக்கு பாரிய அளவில் இழப்பு ஏற்பட்டாலும் அதனால் செல்வ சமத்துவமின்மை இடைவெளி  பெரிய அளவில்  குறையவில்லை. தற்போதும் எலன் மஸ்க் தான் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உள்ளார்.

    ஜெஃப் பெசோஸ் 2ம் இடத்தில் தொடர்கிறார். ப்ளூம்பெர்க் குறியீட்டின்படி, பிரான்சின் மிகப் பெரிய பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட், 128.7 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். பில்கேட்ஸ் 114.8 பில்லியன் டாலர் சொத்துடன் 4வது இடத்தில் உள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Elon Musk, Jeff Bezos, Mark zuckerberg

    அடுத்த செய்தி