Home » News » International » ELON MUSK IS RICHEST MAN IN THE WORLD GHTA TMN

உலகின் NO.1 பணக்காரராக உயர்ந்த எலான் மஸ்க்... சரிவுகளை சாதனை பாதையாக மாற்றிய வரலாறு

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் CEO-வாக இருக்கும் எலான் மஸ்க், உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோசனை பின்னுக்குத்தள்ளி முதலிடத்துக்கு உயர்ந்துள்ளார்.

உலகின் NO.1 பணக்காரராக உயர்ந்த எலான் மஸ்க்... சரிவுகளை சாதனை பாதையாக மாற்றிய வரலாறு
எலான் மஸ்க்
  • Share this:
நம்பிக்கை உள்ளவன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு நிச்சயம் வெற்றியடைவான். ஒருபோதும் சோர்ந்துபோகவோ, ஒதுங்கிவிட வேண்டும் என்றோ எண்ணிப்பார்க்க மாட்டான். அதற்கு, நிறைய பேர் உதாரணமாக இருந்தாலும், இன்றைய உதாரணம் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் CEO-வாக இருக்கும் எலான் மஸ்க் தான். வாழ்க்கையில் சந்தித்த அனைத்து சவால்களையும், தனது புத்திக் கூர்மையாலும், விடாமுயற்சியாலும் வென்று இன்று உலகின் நம்பர் 1 பணக்காரராக உயர்ந்துள்ளார். 

அவரின் இன்றைய சொத்து மதிப்பு 180 மில்லியன் டாலருக்கும் மேல் என கணக்கிட்டுள்ளது ப்ளூம்பெர்க் நிறுவனம். 2020ம் ஆண்டு தொடக்கத்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் 35வது இடத்தில் இருந்த அவர் ஒரே ஆண்டில் அசுர வளர்ச்சி பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இது எப்படி சாத்தியமானது?. தென் ஆப்பிரிக்காவில் பிறந்த எலன் மஸ்க், சிறுவயதில் இருந்து சுறுசுறுப்பாகவும், புத்திக்கூர்மையாகவும் செயல்படக்கூடியவராக இருந்துள்ளார். அவரின் இந்த ஆற்றல் இயல்பாகவே டெக் துறைக்கு இழுத்துச் சென்றது. 

இவர் பள்ளிப்படிப்பை கனடா மற்றும் அமெரிக்காவில் முடித்தார். 12 வயதிலேயே 'Blaster' என்ற வீடியோ கேமை வடிவமைத்து, அதனை PC and Office Technology என்ற இதழிடம் 500 டாலருக்கு விற்றார். 25 வயதில் சகோதரருடன் இணைந்து Zip2 என்ற ஆன்லைன் விளம்பர நிறுவனத்தைத் தொடங்கி,  Compaq நிறுவனத்திடம் 307 மில்லியன் டாலருக்கு விற்றார். இதன்மூலம் லட்சாதிபதியாக உயர்ந்தார். பின்னர், ஆன்லைன் பேங்கிங் நிறுவனமான X.com-ஐ 10 மில்லியன் டாலர் முதலீட்டில் தொடங்கினார். இது Confinity என்ற நிறுவனத்துடன் இணைந்து PayPal - ஆக மாற்றம் பெற்றது. இதன் CEO-வாக  இருந்த எலன் மஸ்க்கின் சிறப்பான நிர்வாகத்தால், நிறுவனம் வேகமாக உயர்ந்தது. 


பின்னர் அதனை ebay நிறுவனத்திற்கு 1.5 பில்லியனுக்கு 2002ம் ஆண்டு விற்பனை செய்தார். அதில் கிடைத்த பணத்தை SpaceX நிறுவனத்திலும், டெஸ்லா நிறுவனத்திலும் முதலீடு செய்தார். அப்போது பேசிய அவர், "டெஸ்லாவின் வெற்றி உலகின் எதிர்காலத்துக்கு மிகவும் அத்தியாவசியமானது" என்றார். அவரின் ஆளுமைத் திறன், அயராத உழைப்பு, தான் நம்பிக்கை கொள்ளும் விஷயத்தில் உறுதியாக இருப்பது போன்ற காரணங்களால், டெக் ஜாம்பவானாகவும், உலகின் நம்பர் ஒன் பணக்காரராகவும் இருக்கிறார். அவரின் இத்தகைய வளர்ச்சியில் டெஸ்லாவின் வளர்ச்சியும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 

சாதனைகள் அனைத்தையும் ஒரே நாளில் அவர் அடைந்துவிடவில்லை. அதற்காக பல்வேறு கடும் சோதனைகளையும் எதிர்கொண்டு இருக்கிறார். 2008ல் டெஸ்லா திவாலாகும் நிலை ஏற்பட்டது. தனது சொந்த பணத்தை முதலீடு செய்து, அந்த நிறுவனத்தைக் காப்பாற்றி CEO-வாகவும் பதவியேற்று கொண்டார். பின்னர், அந்த நிறுவனத்தின் வளர்ச்சியைப் பற்றி உலகு அறியும். "2008ம் ஆண்டு என் வாழ்க்கையில் மிகவும் மோசமான ஆண்டு" என அவர் அடிக்கடி குறிப்பிடுவதும் உண்டு. 2008ம் ஆண்டைப் போல் 2018ம் ஆண்டும் பிரச்சனையில் சிக்கினார். அந்த ஆண்டில் டெஸ்லாவை பிரைவேட் நிறுவனமாக மாற்றுவதாக அறிவித்தார். 

இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் அதனை கைவிட்டு பப்ளிக் நிறுவனமாகவே இருக்கும் என அறிவித்தார். பின்னர், செக்யூரிட்டி மற்றும் எக்ஸ்சேஞ் கமிஷனுடன் ,மோதலில் ஈடுபட்டதால், எலன் மஸ்க் மோசடி செய்ததாக கூறி 20 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது. அதே ஆண்டில் தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய இளம் கால்பந்து வீரர்களை மீட்க, சிறிய நீர்மூழ்கி கப்பலை வழங்குவதாக அறிவித்தார். இதனை கேலி செய்த வெர்னான் அன்ஸ்வொர்தை , சமூகவலைதளத்தில் "pedo guy" என விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர், கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் எலன்மஸ்க் மீது வெர்னான் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இருந்து நீதிமன்றம் மஸ்கை விடுவித்தது. 2020ல் அமெரிக்காவில் விதிக்கப்பட்ட கொரோனா தொடர்பான விதிமுறைகளை கேள்வி எழுப்பி மஸ்க் சர்ச்சையில் சிக்கினார். இறுதியாக கலிஃபோர்னியா அதிகாரிகளுடன் மேற்கொண்ட சமரச முயற்சிக்குப் பிறகு இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது. டெஸ்லா நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் கொரோனா விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இப்படி, பல்வேறு சோதனைகளையும் கடந்து தற்போது உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கும் அவர், இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில்" How Strange' என கூலாக சொல்லிவிட்டு, அடுத்த நிமிடமே, "வாங்க வேலையைப் பார்ப்போம்" என்று கூறியுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 9, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading