ஹோம் /நியூஸ் /உலகம் /

ட்விட்டரில் புளூ டிக் சேவை குறித்த அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க்

ட்விட்டரில் புளூ டிக் சேவை குறித்த அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தை டெஸ்லா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக இருந்த எலன் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது ட்விட்டர் சமூக வலைதளம். ட்விட்டரில் கணக்கு வைக்காமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.  அப்படி பிரபலமான ட்விட்டர் நிறுவனத்தை டெஸ்லா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக இருந்த எலன் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதிரடியாக ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து அதிர்ச்சி கொடுத்த எலன் மஸ்க், கட்டண அடிப்படையில் புளூ டிக் முறை அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார்.

  ட்விட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகின்றனர். இந்த ட்விட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், குறிப்பிட்ட பயனர்கள் ட்விட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

  இந்த நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் ஆயிரத்து அறுநூறு ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ட்விட்டர் 'புளூ டிக்கிற்கு' கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்தச் சேவையானது இந்தியாவில் பெற மாதம்  719 செலவாகும் ரூபாய்.

  Also Read : 'தேசிய கீதம் பாட மாட்டோம்'.. ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவாக ஈரான் கால்பந்து வீரர்கள் போர்கொடி

  இந்த நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக் சந்தா சேவையை மீண்டும் தொடங்குவதை ட்விட்டர் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் புளூ டிக் சேவையை பயன்படுத்தும் நிறுவனதங்களுக்கும் தனிநபர்களுக்கும் வெவ்வேறு அடையாள நிறங்களை வழங்க உள்ளதாக எலான் மஸ்க் கூறினார்.

  நிறுவனங்களையும் தனிநபர்களையும்  வேறுபடுத்தி காட்டும் வகையில் நிற வேறுபாடுகளுடன் பயன்பாட்டாளரை உறுதி செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் எலன்  மஸ்க் அறிவித்துள்ளார்.

  எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திதில் இருந்தே அதிரடி அறிவிப்புகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் பஞ்சமே இல்லை. ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் முன்னரே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு நீதிமன்றம் வரை விவகாரத்தை கொண்டு சென்றவர் எலன் மஸ்க். இன்னும் என்னென்ன செய்ய காத்திருக்கிறாரோ தெரியவில்லை என பதைபதைப்போடு காத்திருக்கிறார்கள் ட்விட்டர் பயன்பாட்டார்கள்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Elon Musk, Twitter