உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலோன் மஸ்க் ட்விட்டரை மொத்தமாக வாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ரூ. 3.2 லட்சம் கோடியை ட்விட்டர் நிறுவனத்திற்கு அவர் தருவதாக அறிவித்துள்ளார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ட்விட்டரின் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களாக எலோன் மஸ்க் விமர்சித்து வந்த நிலையில் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். மஸ்க் அளித்துள்ள ஆஃபரை ஏற்பதா வேண்டாமா என்ற ஆலோசனையில் ட்விட்டர் நிர்வாக போர்டு ஈடுபட்டுள்ளது.
தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லாவின் உரிமையாளர் எலோன் மஸ்க். பொறியியல் வல்லுனரான இவர், உலகின் நம்பர் ஒன் பணக்காரராக கருதப்படுகிறார். இளைஞர்கள் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்து வரும் இவரை ட்விட்டரில் மட்டும் 8 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
இதையும் படிங்க - உக்ரைன் வீரரின் மனைவி என்று தெரிந்ததும் பாலியல் வன்முறை செய்தனர்.. ரஷ்ய ராணுவம் மீது பெண் குற்றச்சாட்டு
ட்விட்டரின் மொத்த பங்கில் 9.2 சதவீதம் மஸ்க்கிடம் உள்ளது. போர்டு மெம்பராக இருக்கும் அவர் அதிகபட்சமாக 14.9 சதவீத பங்குகளை மட்டுமே வாங்க முடியும். இதை வைத்துக் கொண்டு ட்விட்டரின் நிர்வாக முடிவுகளில் எலோன் மஸ்க்கால் ஆளுமை செலுத்த முடியாது.
இந்நிலையில் ட்விட்டர் நிர்வாக வாரிய தலைவர் பிராட் டெய்லருக்கு நேற்று மஸ்க் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ''உலகம் முழுவதும் சுதந்திரமான பேச்சுக்கான தளமாக இருக்கும் என்று நான் நம்புவதால், ட்விட்டரில் முதலீடு செய்தேன். ஜனநாயகத்திற்கு பேச்சு சுதந்திரம் அவசிய தேவை என்று நான் நம்புகிறேன்.
இதையும் படிங்க - பொருளாதார நெருக்கடி : திவால் நிலையை அறிவித்துள்ள இலங்கை அரசு!
இருப்பினும், எனது முதலீட்டைச் செய்ததில் இருந்து, நிறுவனம் வளர்ச்சி அடையவில்லை. மேலும், தற்போதைய அமைப்பில் இந்த சமூகத்திற்கு சேவை செய்ய முடியாது என்பதை இப்போது உணர்கிறேன். ட்விட்டரை தனியார் நிறுவனமாக மாற்ற வேண்டும்.'' என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து ட்விட்டருக்கு ரூ. 3.2 லட்சம் கோடியை நிர்ணயித்துள்ள எலோன் மஸ்க், தனது இந்த ஆஃபர் இறுதியானது என்று குறிப்பிட்டுள்ளார். இதனை ஏற்காவிட்டால் பங்குதாரராக தனது நிலையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.