Home /News /international /

மீண்டும் பிரிந்த எலான் மஸ்க் - பாடகி கிரிம்ஸ்... 2வது குழந்தை பெற்ற பிறகு ஏன் இந்த அதிரடி முடிவு?

மீண்டும் பிரிந்த எலான் மஸ்க் - பாடகி கிரிம்ஸ்... 2வது குழந்தை பெற்ற பிறகு ஏன் இந்த அதிரடி முடிவு?

elon musk

elon musk

தற்போது உலக பணக்காரரான எலான் மஸ்க், 33 வயதான தனது மனைவி கிரீம்ஸை பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இருவரும் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. 

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் தலைசிறந்த தொழிலதிபராக மட்டுமின்றி, சோசியல் மீடியா பிரபலமாக வலம் வருகிறார். வாரத்தில் ஒருமுறையாவது செய்திகளில் அடிபடும் அளவிற்கு பிரபலமான நபர். எலான் மஸ்க் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்த இசைக்கலைஞரான கிரீம்ஸுக்கும் சமீபத்தில் தான் இரண்டாவது குழந்தை பிறந்தது. வாடகை தாய் மூலமாக பிறந்த பெண் குழந்தைக்கு எக்ஸா டார்க் சைட்ரேல் மஸ்க் (Exa Dark Sideræl Musk) என பெயர்வைத்திருந்தனர். எலான், கீரிம்ஸ் தம்பதி அந்த குழந்தையை ஒய் (Y) என செல்லமாக அழைத்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது உலக பணக்காரரான எலான் மஸ்க், 33 வயதான தனது மனைவி கிரீம்ஸை பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இருவரும் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த வியாழன் அன்று, க்ரைம்ஸ் உறவு குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், " வேனிட்டி ஃபேர் கவர் உடனான நேர்காணலுக்கு பிறகு, நானும் அவரும் பிரிந்துவிட்டோம். ஆனால் அவர் எனது சிறந்த நண்பர் மற்றும் என் வாழ்க்கைக்கான அன்பு. வாழ்க்கையும் கலையும் என்றென்றும் எனது கொள்கைககக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. கதையின் அந்த பகுதியை டெவின் நன்றாக எழுதினார் என்று நினைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

2018: பிப்ரவரி 2018ல் ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹியர்டிலிருந்து பிரிந்த பிறகு, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் கிரிம்ஸுடன் டேட்டிங்கில் இருப்பதாக வதந்திகள் கிளம்பின. ஏப்ரல் 2018 இல் ட்விட்டரில் உல்லாசமாகப் பழகினார்கள். இருவரும் மே மாதம் நடந்த மெட் காலாவில் ஜோடியாக வலம் வந்தது வைரலானது.

ஆகஸ்ட் 2018: இந்த ஜோடி சமூக ஊடகங்களில் ஒருவரையொருவர் பின்தொடராமல் இருந்ததால் இருவரும் பிரிந்ததாக வதந்திகள் கிளம்பின.

அக்டோபர் 2018: மஸ்க் மற்றும் க்ரைம்ஸ் அக்டோபரில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவரது குழந்தைகளுடன் தோன்றிய போட்டோஸ் வைரலானது. இதனையடுத்து இருவரும் சமரசம் ஆனதாக தகவல்கள் வெளியாகின.

டிசம்பர் 2019: கர்தாஷியன்-ஜென்னர் குடும்பத்தின் கிறிஸ்துமஸ் விருந்தில் மஸ்க் மற்றும் கிரிம்ஸ் ஒன்றாக கலந்து கொண்டனர்.

ஜனவரி 2020: க்ரைம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். மார்ச் 2020ல் எலான் மஸ்க் தனது குழந்தையின் தந்தை என அறிவித்தார். மே 2020ல், க்ரைம்ஸ் அவர்களின் முதல் குழந்தையான X E A-Xii மஸ்க் என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்ததை மஸ்க் உலகிற்கு அறிவித்தார்.

22 ஆண்டுகளாக சிப்ஸ் மற்றும் சிக்கன் மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் பிரிட்டன் பெண்மணி


செப்டம்பர் 2021: பேட்டி ஒன்றில் தானும் கிரிம்ஸும் பிரிந்துவிட்டதாக எலான் மஸ்க் அறிவித்தார். "நாங்கள் அரைகுறையாகப் பிரிந்திருக்கிறோம், ஆனால் இன்னும் ஒருவரையொருவர் நேசிக்கிறோம், ஒருவரையொருவர் அடிக்கடி பார்க்கிறோம், நல்ல உறவில் இருக்கிறோம். "ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லாவில் எனது பணிக்கு நான் முதன்மையாக டெக்சாஸில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும். அவருடைய பணி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ளது” என இருவரும் பணிக்கு முக்கியத்துவம் தருவதை எடுத்துரைத்தார்.

டிசம்பர் 2021: கிரிம்ஸும் மஸ்க்கும் வாடகைத் தாய் மூலம் தங்கள் இரண்டாவது குழந்தை பிறந்தது.

மார்ச் 2022: வேனிட்டி ஃபேர் உடனான தனது நேர்காணலின் போது க்ரைம்ஸ் மஸ்க்குடன் தனது இரண்டாவது குழந்தை பற்றிய செய்தியை உறுதிப்படுத்தினார். வேனிட்டி ஃபேரின் கவர் ஸ்டோரி க்ரைம்ஸ் மற்றும் மஸ்க் மீண்டும் ஒன்றாக இருப்பதை வெளிப்படுத்தியது. இருப்பினும், வியாழக்கிழமை தனது சமீபத்திய ட்வீட்டில், இந்த ஜோடி மீண்டும் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
Published by:Lilly Mary Kamala
First published:

அடுத்த செய்தி