Home /News /international /

Elon Musk : கனடா பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்டு ட்வீட் செய்த எலான் மஸ்க்... வலுக்கும் கண்டனங்கள்!

Elon Musk : கனடா பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்டு ட்வீட் செய்த எலான் மஸ்க்... வலுக்கும் கண்டனங்கள்!

எலான் மஸ்க் வலுக்கும் கண்டனங்கள்!

எலான் மஸ்க் வலுக்கும் கண்டனங்கள்!

Elon Musk : ஜஸ்டின் ட்ரூடோவை சர்வாதிகாரி ஹிட்லர் உடன் ஒப்பிட்டு எலான் மஸ்க் செய்த ட்வீட் டெலிட் செய்யப்பட்ட பிறகு, சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.

உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவரும், டெஸ்லா மற்றும் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனங்களின் சிஇ ஓவுமான எலான் மஸ்க் சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக வலம் வருகிறார். உலகம் முழுவதும் நடக்கும் பல்வேறு சமுதாய மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்து ட்வீட் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அப்படி எலான் மஸ்க் ட்வீட் செய்யும் கருத்துக்கள் சில சமயங்களில் சர்ச்சையில் சிக்குவதும் உண்டு.

தற்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சித்து எலான் மஸ்க் பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை உருவாக்கிய நிலையில் அதனை டெலிட் செய்துள்ளார் அவர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் ஆயுதமாக தடுப்பூசிகள் விளங்கி வருகின்றன. பல்வேறு நாடுகளும் தமது மக்களை முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை கடைபிடித்து வருகின்றன. இந்நிலையில் கனடா - அமெரிக்கா எல்லையை கடக்க தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரக் டிரைவர்கள் கனடாவில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்துவது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது எனக்கூறி போராட்டம் வலுத்து வருகிறது. இதனையடுத்து கடந்த வாரம் கனடாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. போராட்டக்காரர்களைக் கலைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், குறிப்பாக போராட்டக்காரர்களுக்குச் செல்லும் நிதியுதவியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் ட்ரூடோ அறிவித்திருந்தார்.கனடா பிரதமரின் அறிவிப்பிற்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவை சர்வாதிகாரி ஹிட்லர் உடன் ஒப்பிட்டு எலான் மஸ்க் செய்த ட்வீட் டெலிட் செய்யப்பட்ட பிறகு, சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.

இதையும் படியுங்கள் : குழந்தைக்கு சுஷ்மா என்ற பெயர் சூட்ட முடிவெடுத்தார் என் அம்மா... பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு

கலிபோர்னியாவில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு அன்று எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மீம்ஸை பகிர்ந்தார். அதில் அடால்ஃப் ஹிட்லரின் புகைப்படம் உள்ளது. “என்னை ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்” என கூறும் விதமான வாசம் இடம் பெற்றிருந்தது. இனவெறியால் பல்லாயிரக்கணக்கான் உயிர்களை கொன்று குவித்த ஹிட்லருடன் கனடா பிரதமரை ஒப்பிட்டது கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

இதனையடுத்து மறுநாளான வியாக்கிழமை அன்று மதியம் தான் பதிவிட்ட ட்வீட்டை டெலிட் செய்தார். இருப்பினும் இதுதொடர்பான கருத்துக்கள் சோசியல் மீடியாவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த கருத்திற்காக எலான் மஸ்க் உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டுமென அமெரிக்க யூதக் குழு வலியுறுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள் : விவசாயிகளுக்கான பிரதமரின் ₹6,000 நிதிஉதவித் திட்டம்: யார் பலன் பெற முடியாது? சந்தேகங்களும்.. விளக்கங்களும்..

ட்விட்டர் பிரபலமான எலான் மஸ்க்கை சுமார் 74 மில்லியன் பேர் பின் தொடருகின்றனர். தனது வர்த்தகம் தொடர்பான மார்க்கெட்டிங் வேலைகளை ட்விட்டரிலேயே முடித்துக்கொள்ளும் அளவிற்கு அவருக்கான ஃபாலோயர்கள் உள்ளனர். ஏற்கனவே அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக எலான் மஸ்க் பதிவிட்டு வரும் ட்வீட் பிரச்சனையை கிளப்பி வரும் நிலையில், கனடா பிரதமர் பற்றி ட்வீட் “எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியதை போல்” சிக்கலை பெரிதாக்கியுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Hitler

அடுத்த செய்தி