#Trending | 12 வருடங்களுக்கு பிறகு தாயைச் சந்தித்த குட்டி யானை.. முழுக்கதையும், ட்ரெண்டாகும் புகைப்படங்களும் உள்ளே..

தாய் யானை பொரியும், குட்டி டானா மற்றும் அதன் குட்டிகளான டமிகா, இலானியுடனும், ஒரே இடத்தில் வசிக்க வைக்கப்பட்டுள்ளது என வனவிலங்கு பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#Trending | 12 வருடங்களுக்கு பிறகு தாயைச் சந்தித்த குட்டி யானை.. முழுக்கதையும், ட்ரெண்டாகும் புகைப்படங்களும் உள்ளே..
ஜெர்மன் பூங்காவில் நடந்த குடும்ப பிணைப்பு
  • Share this:
ஜெர்மனியின் ஹல்லே வனவிலங்கு பூங்காவில், 12 வருடங்கள் கழித்து தாய் யானையும், குட்டி யானையும் சந்தித்து அன்பைப் பொழியும் புகைப்படம் சோஷியல் மீடியாக்களில் லைக்ஸை குவித்து வருகிறது.

PORI IST DA!


Heute Nachmittag ist die afrikanische Elefantenkuh Pori (39 Jahre) wohlbehalten aus Berlin bei uns...

Posted by Zoo Halle on Thursday, August 20, 2020

தனித்தனியாக பூட்டப்பட்டிருக்கும் தாய் யானையும், குட்டி யானையும் தந்தங்களைச் சேர்த்து அன்பைப் பொழியும் புகைப்படம், நல்ல அதிர்வை உண்டாக்கியிருப்பதாக சமூக வலைதளவாசிகள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் படிக்க: 7000-க்கும் அதிகமாக உயிரிழந்த குழந்தைகள்: தட்டம்மை நோய் முடிவுக்கு வந்ததாக அறிவித்தது காங்கோ..

ஹல்லே வனவிலங்குப் பூங்கா அளித்துள்ள தகவலின்படி, ”தாய் யானை பொரி ஜிம்பாப்வே நாட்டில் பிறந்தது.  பிறந்த இரண்டு வருடங்களில் ஜெர்மனிக்கு கொண்டு வரப்பட்ட பொரி, வெவ்வேறு வனவிலங்குப் பூங்காவில் பராமரிக்கப்பட்ட நிலையில், 2001-இல் டானா என்னும் குட்டியை ஈன்றுள்ளது. சில ஆண்டுகள் தாயுடன் இருந்த டானா, வெவ்வேறு வனவிலங்கு பூங்காக்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.



தற்போது டானாவுக்கு, டமிகா (4 வயது) , இலானி (1 வயது) என்னும் இரண்டு குட்டிகள் உள்ளன. முதல் சில நாட்கள் தனியாக வைக்கப்பட்டிருந்த தாய் யானை பொரி, தற்போது குட்டி டானாவுடனும்,  டானாவின் குட்டிகளான டமிகா, இலானியுடனும் ஒரே இடத்தில் வசிக்க வைக்கப்பட்டுள்ளது என வனவிலங்கு பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading