போட்ஸ்வானாவில் 350 யானைகள் மர்ம மரணம்.. ஆய்வில் அதிர்ச்சி...

இறந்து கிடந்த யானைகள் பெரும்பாலும் முகம் தரையில் படுமாறு குப்புற விழுந்து உயிரிழந்துள்ளன. இவை ஆய்வில் தெரியவந்துள்ளது.

போட்ஸ்வானாவில் 350 யானைகள் மர்ம மரணம்.. ஆய்வில் அதிர்ச்சி...
போட்ஸ்வானாவில் 350 யானைகள் மர்ம மரணம்...ஆய்வில் அதிர்ச்சி
  • Share this:
போட்ஸ்வானாவில் கடந்த இரு மாதங்களில் 350-க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒகவாங்கோ (Okavango) கழிமுகப் பகுதியில் பிரிட்டனைச் சேர்ந்த வனவிலங்கு மீட்பு அறக்கட்டளை நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. யானைகள் எதனால் உயிரிழந்தன என்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
இறந்து கிடந்த யானைகளின் தந்தங்கள் வெட்டப்படவில்லை என்பதால் அவை வேட்டையாடப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இறந்து கிடந்த யானைகள் பெரும்பாலும் முகம் தரையில் படுமாறு குப்புற விழுந்து உயிரிழந்துள்ளன. அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் சில யானைகள் ஒரே இடத்தை வட்டமடித்தபடி சுற்றி வருகின்றன. இது யானைகளின் நரம்பு மண்டலம் தாக்கப்பட்டதற்கான அறிகுறி என்று கூறும் ஆய்வாளர்கள், உடற்கூறு ஆய்வு முடிவுகள் வந்தால் தான் யானைகளின் மரணத்திற்கு உண்மையான காரணம் தெரிய வரும் என கூறுகின்றனர்.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading