Home /News /international /

அமெரிக்காவின் புதிய அதிபர் பைடனா? அல்லது டிரம்பா ? இன்று நடைபெறுகிறது எலக்டோரல் காலேஜ் வாக்குப்பதிவு ..

அமெரிக்காவின் புதிய அதிபர் பைடனா? அல்லது டிரம்பா ? இன்று நடைபெறுகிறது எலக்டோரல் காலேஜ் வாக்குப்பதிவு ..

ஜோ பைடன் | டொனால்ட் ட்ரம்ப்

ஜோ பைடன் | டொனால்ட் ட்ரம்ப்

புதிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பா அல்லது ஜோ பைடனா என்பதை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிரதிநிதிகள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பைடனும், குடியரசுக் கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிட்டனர். இதில், அதிக இடங்களை கைப்பற்றி, புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடன் கமலா ஹாரிசும் துணை அதிபராக தேர்வாகியுள்ளார். இந்த நிலையில் அரியணையில் அமரப்போகும் அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிரதிநிதிகளின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 50 மாகாணங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 538 உறுப்பினர்கள், அதிபரை தேர்வு செய்வதற்கு வாக்களிக்கவுள்ளனர்.

    இதில், ஜனநாயக கட்சியின் மூலம் வெற்றிபெற்ற 306 உறுப்பினர்கள், ஜோ பைடனுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் டிரம்புக்கு ஆதரவாக குடியரசுக் கட்சியின் மூலம் தேர்வாகியுள்ள 232 உறுப்பினர்கள் வாக்களிக்க இருக்கின்றனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறுபவர்களே வெள்ளை மாளிகையில் புதிய அதிபராக ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்பார்.

    மேலும் படிக்க...அமெரிக்க மக்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகின்றது

    வழக்கமாக, பொது தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றுபவர்களே தேர்தல் பிரதிநிதிகள் வாக்கெடுப்பிலும் வெற்றிபெறும் வாய்ப்பு இருந்து வருகிறது. ஆனால் இம்முறை அதிபர் டொனால்ட் டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துவருவதால், தேர்வாகியுள்ள பிரதிநிதிகளின் வாக்குப்பதிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Donald Trump, Joe biden, US Election 2020

    அடுத்த செய்தி