Home /News /international /

இங்கிலாந்தில் 3,000 கிமீக்கு மேல் இலவசமாக பயணம் செய்த மூதாட்டி!

இங்கிலாந்தில் 3,000 கிமீக்கு மேல் இலவசமாக பயணம் செய்த மூதாட்டி!

சுற்றுலா சென்ற மூதாட்டி

சுற்றுலா சென்ற மூதாட்டி

இங்கிலாந்தில் 75 வயது மூதாட்டி 3,540 கிமீ தூரத்துக்கு இலவசமாக பயணம் செய்துள்ளார்.

    பயணம் செய்வது அனைவருக்கும் பிடித்த விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பயணங்கள் உற்சாகமாகவும், சாகசமாகவும் இருக்கும், ஆனால் இதற்கு நிறைய செலவுகள் ஏற்படும். கோவிட்-19 பரவலால் அமலில் இருந்த ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளது.

    ஓராண்டுக்கும் மேல் ஊரடங்கு இருந்ததால் அதனை சரிசெய்ய தற்போது விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் 75 வயதான பாட்டி ஒருவர் 2,200 மைல்கள் (சுமார் 3,540 கிமீ) கிட்டத்தட்ட எந்த செலவும் இல்லாமல் பயணம் செய்துள்ளார். பென்னி இபோட் இலவச பஸ் பாஸை தனது ‘டிக்கெட்டாக’ பயன்படுத்தி தனது வீட்டிலிருந்து இங்கிலாந்தை சுற்றி ஆறு வாரங்கள் பஸ்ஸில் பயணம் செய்துள்ளார்.

    தி மிரர் செய்தி தளத்தில் வெளியான தகவலின்படி, இபோட் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் பேருந்துகளில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்காக செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் கிழக்கு கடற்கரையை நோக்கி 700 எண் பேருந்தில் ஏறி பயணத்தை தொடங்கியுள்ளார். ஸ்காட்லாந்து எல்லையில் இருந்த நேரத்தை தவிர தனது முழு பயணத்திலும் இலவச பாஸைப் பயன்படுத்தியுள்ளார். அதன்படி இங்கிலாந்தின் உச்சியில் உள்ள பெர்விக்-அன்-ட்வீட், ஸ்காட்டிஷ் எல்லையைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மேற்கு கடற்கரையிலிருந்து லேண்ட்ஸ் எண்ட் வரை பயணம் செய்துள்ளார்.

    பென்னி இபோட் செப்டம்பர் 6ம் தேதி தனது பயணத்தை தொடங்கி, அக்டோபர் 16ம் தேதி தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். இந்த பயணத்தை கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியுள்ளார். ஆனால் கொரோனா பரவல் தீவிரமாக இருந்ததால் இங்கிலாந்து முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தனது பயணத்தை 10 நாட்களில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தனது பயணத்தை சில நாட்கள் ஒதுக்கிவைத்து விட்டு வீட்டில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் அரசிடம் இருந்து பெற்ற இலவச பாஸ் மூலம் பேருந்தில் பயணம் செய்து வருகிறேன். இந்த இலவச பஸ் பாஸ் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    ஐந்து வாரங்கள் மற்றும் ஐந்து நாட்கள் 120 பேருந்துகளில் 3500க்கும் அதிகமான முறை பயணம் செய்தில் அன்பான நபர்களை சந்தித்தேன் என்றும் ஒவ்வொரு பேருந்திலும் எனது ஓய்வூதிய இலவச பஸ் பாஸை நான் பயன்படுத்தினேன் ஆனால் ஸ்காட்டிஷ் எல்லையில் அது செல்லுபடியாகவில்லை, அதனால் நான் அங்கு மட்டும் பணம் செலுத்த வேண்டியிருந்தது என்றும் கூறியுள்ளார்.

    Must Read : காதலியின் திருமணத்தை நிறுத்த காதலன் செய்த அதிரடி செயல்: அதிர்ச்சியில் மணமகன்

    இந்த பயணத்தில் டெவோனில் உள்ள மைன்ஹெட் முதல் லின்மவுத் வரையிலான இடம் எனக்கு பிடித்த பகுதி என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் தான் உயிரோடு இருக்கும் வரை இன்னும் பல இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Archana R
    First published:

    Tags: England, Travel

    அடுத்த செய்தி