பாகிஸ்தானில் நடந்த எல்லை கடந்த பயங்கரவாத தாக்குதலில் 8 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 12 வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடந்த எல்லை கடந்த பயங்கரவாத தாக்குதலில் அந்நாட்டின் 8 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பல்வேறு பகுதிகளிலும் குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.
ஆப்கான் எல்லையிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதுபற்றி பாகிஸ்தான் ஆயுத படையின் ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய வேலி பகுதியில் இருந்து குர்ரம் மாவட்டத்திற்குள், ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் நேற்றும், நேற்று முன்தினமும் ஊடுருவ முயன்றனர் என தெரிவித்து உள்ளது.
ராணுவம் பதிலடி கொடுத்து இதனை முறியடித்து உள்ளது. இந்த சம்பவத்தில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். ரோந்து பணியில் 4 போலீஸ் கான்ஸ்டபிள்கள் கொல்லப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில், வடக்கு வசீரிஸ்தானில் 3 வெவ்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்து உள்ளார்.
மேலும் ஒரு சம்பவத்தில் போலீஸ் படைத் தலைவர் லக்கி நகரத்தில் தாக்குதலுக்கு ஆளானார். துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் இருசக்கர வாகனத்தில் வந்த் போலீஸ் வேன் மீது சரமாரியாக சுட்டனர். இதனையடுத்து மேலும் போலீஸ் படை வரவழைக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதோடு அல்லாமல் வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் நடந்த இன்னொரு பயங்கரவாதத் தாக்குதலில் 3 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். சாலையோர குண்டுவெடிப்பில் ஆப்கான் எல்லையான டேகன் பகுதியில் மேலும் ஒரு ராணுவ வீரர் பலியானார். ரஸ்மக் தேஹ்சில் பகுதியில் உள்ள கர்யூமில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் இன்னொரு ராணுவ வீரர் பலியானார்.
மிராலி டவுனில் இன்னொரு ராணுவ வீரர் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.