பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் வீட்டில் ரூ.90,000 மதிப்புள்ள ஆடு திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் அந்நாட்டின் லாகூர் நகரில் வசித்து வருகிறார்.
பக்ரீத் பண்டிகை இன்னும் சில நாள்களில் கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த பண்டிகையில் பலி கொடுப்பதற்காக ஆறு ஆடுகளை கம்ரான் அக்மல் வீட்டினர் வாங்கியுள்ளனர். இந்த ஆடுகளை வீட்டின் வெளியே தொழுவத்தில் வைத்து அதை பாதுகாத்து பராமரிக்க ஒரு உதவியாளரையும் வைத்துள்ளனர். இந்நிலையில், அவரது வீட்டில் பக்ரீத் பண்டிகைக்காக வாங்கி வைத்த விலை உயர்ந்த ஆடு ஒன்றை திருடர்கள் களவாடிச் சென்றுவிட்டதாக கம்ரான் அக்மலின் தந்தை புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நள்ளிரவில் நடைபெற்ற நிலையில், ஆட்டை பராமரிக்கும் உதவியாளர் தூங்கிக்கொண்டிருந்த நேரம் பார்த்து திருடர்கள் ஆட்டை திருடியுள்ளனர்.
அங்கிருந்து ஆறு ஆடுகளில் ரூ.90,000 மதிப்புள்ள விலை உயர்ந்த ஆட்டை திருடர்கள் தூக்கி சென்று விட்டதாக கம்ரான் அக்மலின் தந்தை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மாவட்ட அதிகாரிகளிடம் கம்ரான் அக்மல் வீட்டினர் புகார் அளித்துள்ள நிலையில், விரைவில் திருடர்களை பிடித்து ஆட்டை மீட்டு தருவோம் என உறுதி அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜப்பான் முன்னாள் பிரதமர் மரணத்தை கொண்டாடி சர்ச்சையில் சிக்கிய சீனர்கள்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான கம்ரான் அக்மல் மேட்ச் பிக்சிங் புகாரில் சிக்கி ஓரம் கட்டப்பட்டவர் ஆவர். இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டில் தான் தனது கடைசி சர்வதேச போட்டியை விளையாடினார். அத்துடன் பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து கம்ரான் அக்மல் கருத்து தெரிவித்துவருகிறார். வரப்போகும் இலங்கை சுற்றுப் பயணத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மோசமான அணியை தேர்வு செய்ததாக கம்ரான் அக்மல் விமர்சித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bakrid, Pakistan Cricketer