படுக்க வைத்து உடல் முழுவதும் பாம்பு மசாஜ்... எங்க தெரியுமா?

படுக்க வைத்து உடல் முழுவதும் பாம்பு மசாஜ்... எங்க தெரியுமா?

பாம்பு மசாஜ் ( படம் : ராய்ட்டர்ஸ் )

பயப்படாதீங்க இது நம்ம ஊர்ல இல்லை... எகிப்தில் பாம்பு மசாஜ் அறிமுகம் ஆகியுள்ளது. குற்றால சீசனுக்கு குப்பற படுத்து மசாஜ் செய்வது போல் அசால்ட்டாக இந்த மசாஜை எகிப்து மக்கள் செய்து வருகின்றனர்.

 • Share this:
  ‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ எனும் வாசகம் தான் இதனைப் பார்த்தவுடன் நம் நினைவிற்கு வரும். எத்தனையோ மாசாஜ்கள் இருக்க தற்போது எகிப்தில் செய்யப்படும் பாம்பு மசாஜ் பிரபலமாகப் பேசப்பட்டு வருகின்றது.

  களைத்த உடலுக்கு மசாஜ்தான் சரியான தீர்வு. குறைந்தது மாதம் ஒரு முறையேனும் உடலுக்கு சிறந்த மசாஜ் கொடுத்தால் நல்ல மாற்றம், புத்துணர்ச்சி உண்டாகும். மனம் ஆழ்ந்த ஓய்வு நிலையை அடையவும், உடல் புத்துணர்ச்சியை உணரவும் மசாஜ் சிறந்த தீர்வு. எனினும் நம்மவர்களில் பலரும் மசாஜ் என்றால் வீட்டிலேயே இருக்கும் எண்ணெய்களை வைத்து பயன்படுத்தி குளித்து விட்டு அன்றைய நாளை புத்துணர்வாக வைத்துக்கொள்வோம்.

  அருகில் ஆறு, அருவி என ஏதேனும் இருந்தால் அங்கு சென்று மசாஜ் செய்து வருவோம். தற்போது நகர்ப்புறங்களில் ஸ்பா எனும் பெயரில் சில சென்டர்கள் தென்படும். வசதி படைத்த சிலர் அங்கு செல்வதும் உண்டு. மாசாஜ்கள் குறித்த நமது கண்ணோட்டம் இத்தோடு இருக்க, பார்ப்பதற்கே பயத்தை ஏற்படுத்தும் அளவில் பாம்புகளைக் கொண்டு எகிப்தில் மசாஜ் செய்து வருகின்றனர். இந்த பாம்புகள்  விஷத் தன்மை அற்றது. இவற்றை மசாஜ் செய்ய மட்டுமே பயன்படுத்தப் படுகின்றது,

  இதற்கு அந்நாட்டு மசாஜ் செய்துகொள்ளும் வாடிக்கையாளர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனராம். இதனை செய்து கொள்வதால் மனம் புத்துணர்ச்சி அடைவதோடு உடல் வலி எல்லாம் பறந்து போவதாக தெரிவிக்கின்றனர்.

      

  இதற்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா? இந்திய மதிப்பில் ரூ.500 வரை வசூலிக்கின்றனர். இதன் மூலம் 20 - 30 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து விடுகின்றனராம்.
  Published by:Sankaravadivoo G
  First published: