6 நாட்கள்.. எவர்கிவ்வன் கப்பலை மீட்க ரூ.7,300 கோடி செலவாம் - சூயஸ் கால்வாய் நிர்வாகம்

6 நாட்கள்.. எவர்கிவ்வன் கப்பலை மீட்க ரூ.7,300 கோடி செலவாம் - சூயஸ் கால்வாய் நிர்வாகம்

சூயஸ் கால்வாய் பகுதியில் சிக்கிய கப்பல்

சூயஸ் கால்வாயில் இருந்து கப்பல் அகற்றப்பட்ட பின்னர் அங்கு இயல்பு நிலை திரும்பியது. கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

  • Share this:
ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான மிகப்பெரிய சரக்கு கப்பலான எவர் கிவ்வன் கடந்த 23-ம் தேதி எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றபோது குறுக்கே திரும்பி பக்கவாட்டில் தரை தட்டி நின்றது. சூயல் கால்வாய் உலகின் முக்கிய நீர்வழித்தடமாக பார்க்கப்படுகிறது. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் நீர்வழித்தடமான சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலை இணைக்கும் வழி பாதையாக உள்ளது. கப்பல் தரைதட்டியதால் கால்வாய் இரு பக்கங்களிலும் 300-க்கும் மேற்பட்ட கப்பல்கள் அணிவகுத்து நின்றன. சூயஸ் கால்வாயில் டிராபிக் ஜாம் என மீம்ஸ்கள் பறந்தது. உலகின் 12 சதவிகித வர்த்தகத்துக்கு பயன்படும் சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.

இதன் காரணமாக சர்வதேச வர்தகத்தில் நாள் ஒன்றுக்கு 65 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர். இதன்காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டது. சூயஸ் கால்வாயில் அணிவகுத்த கப்பல்களை வேறு பாதையில் திருப்பி விடலாமா என்ற யோசனையில் இறங்கியது எகிப்து அரசு. இழுவை படகுகள் மூலம் கப்பலை கரையில் இருந்து நகர்த்தும் பணிகள் முடக்கிவிடப்பட்டன. 800 பேர் இந்த கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒருவார கால போராட்டத்துக்கு பின்னர் எவர் கிவ்வன் கப்பல் மிதக்கத்தொடங்கியது. சூயஸ் கால்வாயில் இருந்து கப்பல் அகற்றப்பட்ட பின்னர் அங்கு இயல்பு நிலை திரும்பியது. கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

’எவர் கிவ்வன்’ கப்பலை சூயஸ் கால்வாயின் கிரேட் பிட்டர் லேக் என்ற பகுதியில் பாதுகாப்பாக நிறுத்திவைத்துள்ளனர். ‘கப்பல் விபத்தில் சிக்கிய தினத்தில் இருந்து மீட்டது வரை ஒவ்வொரு நாளும் ஏற்பட்ட செலவுகளை கணக்கிட்டு வருகிறோம். அது கிட்டத்தட்ட 100 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 73 ஆயிரம் கோடி) இருக்கும். இந்த விபத்து தொடர்பான முழு விசாரணை முடியும் வரை கப்பல் இங்கேதான் இருக்கும்’என சூயஸ் கால்வாய் நிர்வாகத் தலைவர் ஒசாமா ரபியா கூறியுள்ளார். சூயஸ் கால்வாயில் எற்பட்ட போக்குவரத்து தடையால் எகிப்து அரசாங்கத்திற்கு நாளொன்றுக்கு 1.4 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டதாக ஒசாமா ரபியா குறிப்பிட்டார்.
Published by:Ramprasath H
First published: