உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான எகிப்தின் கிசாவின் பிரமிடு, 4,500 ஆண்டுகளுக்குப் பிறகும், அதன் ஆயிரக்கணக்கான மர்மத்தை வெளியில் காட்டாமலேயே உள்ளது. அதன் உள்ளே என்ன இருக்கும் என்ற பல யுகங்கள் இருந்துவரும் நிலையில் இப்போது, பிரமிட்டின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஒன்பது மீட்டர் (30 அடி) நீளமுள்ள ஒரு மறைக்கப்பட்ட நடைபாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் இருக்கும் பிரமிடுகள் உள்ளே என்ன இருக்கிறது என்பதை உள்ளே சென்று பார்க்க முடியாத நிலையில் 2015 இல் ஸ்கேன் பிரமிடு ( Scan Pyramids project) என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்மூலம் அகச்சிவப்பு தெர்மோகிராபி (infrared thermography) , 3D உருவகப்படுத்துதல் மற்றும் காஸ்மிக்-ரே இமேஜிங் (cosmic-ray imaging) உள்ளிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டமைப்பின் உள்ளே என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.
அந்த ஆராய்ச்சியில், பிரமிட்டின் கட்டுமானம் மற்றும் தாழ்வாரத்தின் முன் அமைந்திருக்கும் ஒரு சுண்ணாம்பு கட்டமைப்பு பற்றி தெரியவந்துள்ளது. அதன் பாதையை உற்று ஆராயும்போது, அது ஒரு முடிக்கப்படாத பாதை என்பது தெரியவந்துள்ளது. அந்த பாதை பிரமிட்டில் எதை இணைப்பதற்காக கட்டப்பட்டிருக்கலாம் என்ற ஆராய்ச்சி நடக்கத் தொடங்கியது.
விஞ்ஞானிகள் காஸ்மிக்-ரே மியூன் ரேடியோகிராபி( cosmic-ray muon radiography) மூலம் தாழ்வாரத்தைக் கண்டறிந்தனர். பின்னர் அவர்கள் அதன துல்லிய படங்களை பெறுவதற்காக ஜப்பானில் இருந்து 6 மிமீ தடிமன் கொண்ட எண்டோஸ்கோப்பை(endoscope) பிரமிட்டின் கற்களில் உள்ள ஒரு சிறிய இடைவெளி வழியாக உள்ளே நுழைத்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தாழ்வார நடைபாதையின் படத்தை சேகரித்தனர்.
அதில், முடிக்கப்படாத நடைபாதையானது பிரதான நுழைவாயிலைச் சுற்றியோ அல்லது இன்னும் கண்டுபிடிக்கப்படாத அறை அல்லது இடத்தைச் சுற்றியோ பிரமிட்டின் எடையை மறுபகிர்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது என்று எகிப்தின் பழங்காலங்களின் உச்ச கவுன்சிலின் தலைவரான மோஸ்டாஃபா வஜிரி கூறுகிறார்.
மேலும் "நாங்கள் எங்கள் ஸ்கேனிங்கைத் தொடரப் போகிறோம், அதன் கீழே அல்லது இந்த நடைபாதையின் முடிவில் என்ன என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்போம்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதையும் படிங்க: வங்காள விரிகுடாவின் இந்த தீவுக்கு தவறி கூட போயிடாதீங்க.. பழங்குடினருக்கு பயந்து அரசே தடை செய்த இடம் இது..!
இந்த எகிப்தின் கிரேட் பிரமிட் 2560 BC இல் பார்வோன் குஃபுவின் ஆட்சியின் போது ஒரு நினைவுச்சின்ன கல்லறையாக கட்டப்பட்டது என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. 1889 ஆம் ஆண்டில், பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் கட்டப்படம் வரை இந்த பிரமிடு தான் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிக உயரமான கட்டிடமாக இருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.