ஒரு முட்டைதான்... ஒரே ஒரு முட்டை... உலக சாதனையை முறியடித்த 25 மில்லியன் லைக்ஸ்!

25 மில்லியன் லைக்ஸ் உடன் உலக சாதனை படைத்துள்ளது இந்த இன்ஸ்டாகிராம் ‘முட்டை’!

ஒரு முட்டைதான்... ஒரே ஒரு முட்டை... உலக சாதனையை முறியடித்த 25 மில்லியன் லைக்ஸ்!
உலக சாதனை முட்டை
  • News18
  • Last Updated: January 14, 2019, 10:41 PM IST
  • Share this:
சர்வதேச அளவில் அதிக லைக்ஸ் பெற்ற ஒரு புகைப்படம். அப்படியென்ன, அந்தப் புகைப்படத்தில் இருக்கிறதென்று ஆச்சரயத்துடன் தேடினால், ஒரு முட்டை.

ஒரு முட்டைதானே, அதில் என்ன சிறப்பு?

வைரக் கல் பதிக்கப்பட்ட முட்டையா? ஏதொவொரு பிரபலம் எடுத்த முட்டையின் புகைப்படமா? இல்லை ஒரு பெரிய பணக்காரரால் அந்த முட்டை ஏலம் எடுக்கப்பட்டதா? என்னதான் அந்தப் புகைப்படத்தில் இருக்கிறது என்று பலரும் முடியைப் பிக்காத குறைதான்! ஒண்ணுமில்லைங்க... அது ஒரு முட்டை. டாட்.


கடந்த ஜனவரி 4-ம் தேதி ’world record egg' என்ற ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த முட்டையின் புகைப்படம் பதியப்பட்டது. யார் எடுத்தப் புகைப்படம் எதற்காக இப்புகைப்படம் பதியப்பட்டது என எந்தத் தகவலும் இல்லை. அந்த இன்ஸ்டா போஸ்டில் ‘நடிகை கெய்லி ஜென்னர் பெற்ற 18 மில்லியன் லைக்ஸ் இதுவரையில் உலக சாதனை ஆக இன்ஸ்டாகிரமில் உள்ளது. இதை முறியடிக்க இந்த முட்டைக்கு லைக் செய்யுங்கள்’ என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

அவ்வளவுதான்...25 மில்லியன் லைக்ஸ் உடன் உலக சாதனை படைத்துள்ளது இந்த இன்ஸ்டாகிராம் ‘முட்டை’!சமூக வலைதள சூறாவளியில் இம்முறை முட்டை!!

மேலும் பார்க்க: இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு... புதுக்கோட்டையில் கோலாகலம்
First published: January 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்