Home /News /international /

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்களின் அடுத்த நிலை என்னவாக இருக்கும்? கல்வியாளர் பரிந்துரைக்கும் 3 வழிகள்!

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்களின் அடுத்த நிலை என்னவாக இருக்கும்? கல்வியாளர் பரிந்துரைக்கும் 3 வழிகள்!

ரஷ்ய-உக்ரைன் போர் ஒரு சர்வதேச பிரச்சனை என்பதால் இம்மாணவர்களின் நிலை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரஷ்ய-உக்ரைன் போர் ஒரு சர்வதேச பிரச்சனை என்பதால் இம்மாணவர்களின் நிலை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரஷ்ய-உக்ரைன் போர் ஒரு சர்வதேச பிரச்சனை என்பதால் இம்மாணவர்களின் நிலை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரஷ்ய போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டு தாய்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார். மேலும், சுமார் 200 தமிழக மாணவர்கள் டெல்லியில் உள்ளனர், அவர்களும் விரைவில் அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவித்திருந்தார்.

உக்ரைனில் சிக்கி இருக்கும் மற்றும் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள தமிழக மாணவர்கள் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை விரைவாக வெளியேற்றுவதற்காக, கடந்த மார்ச் 3ஆம் தேதி, தமிழக அரசு சிறப்புக் குழுவை அமைத்தது. அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த 2,200க்கும் மேற்பட்ட மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களை விரைவில் வீட்டுக்கு அழைத்து வருமாறு வெளியுறவு அமைச்சகத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாக மாநில அரசு தெரிவித்தது.

மீட்புப் பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் ரஷ்ய-உக்ரைன் போரினால் தங்களின் மருத்துவப் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசின் உதவியுடன் சொந்த ஊருக்குத் திரும்பும் தமிழக மாணவர்கள் தெரிவித்தனர். அவர்களின் மருத்துவப் படிப்பை தமிழகத்தில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க | பனை மரங்கள் ஏன் அவசியம்? கடல் அரிப்பை தடுக்க பனை மரங்கள் எவ்வாறு பங்களிக்கின்றன?

நியூஸ்18 தமிழ்நாடு தளத்திற்கு அளித்த பேட்டியில், கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, ‘நடைமுறையில், உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க மாநில அரசு ஒரு சவாலான கட்டத்தை எதிர்கொள்ளக்கூடும். வெளிப்படையாக, மாணவர்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு, இரண்டு, மூன்று சாத்தியக்கூறுகளை செயல்படுத்த முடியும். தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நாடு திரும்பியவர்களுக்கு தகுதித் தேர்வை நடத்தி, தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை ஒதுக்கலாம்,’ என்றார்.

மேலும், கசப்பான விஷயம் என்னவென்றால், ஒரு மாநிலத்திற்கு முறையான உள்கட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதால் மருத்துவ சேர்க்கை சவாலாக இருக்கலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவும் தொற்றுநோய் காரணமாக, சீனா மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் இன்னும் ஆன்லைன் வகுப்புகளில் கல்வி கற்றுக்கொண்டிருப்பதால், உக்ரைனில் இருந்து வரும் மாணவர்களுக்கு இங்கு மருத்துவ சீட் வழங்கினால், அவர்களுக்கும் சீட் கோருவது குறித்து கேள்வி எழுப்பலாம்.

ரஷ்ய-உக்ரைன் போர் ஒரு சர்வதேச பிரச்சனை என்பதால் இம்மாணவர்களின் நிலை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால், பயோமெடிக்கல் இன்ஜினியரிங், பாராமெடிக்கல் படிப்புகள், கால்நடை மருத்துவம் போன்ற பிற தொழில் வாய்ப்புகளுடன் இந்த மாணவர்களுக்கு வழிகாட்ட முடியும் என்கிறார் ஜே.பி.காந்தி.

மூன்றாவது சாத்தியம் என்னவென்றால், மருத்துவக் கல்லூரி வசதிகள் மற்றும் கற்பித்தல் வசதிகளை ஆய்வு செய்ய மாநில அரசு போர்க்கால அடிப்படையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும். இல்லையெனில், மாநிலத்தின் மருத்துவத் தரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம். அது சமரசம் செய்ய முடியாத ஒன்று. அப்படி செய்யாவிட்டால், இறுதியில் சட்ட சிக்கல்களில் முடிவடையும். எனவே, உடனடியாக ஒரு குழுவை அமைப்பது மாநில அரசின் கைகளில் உள்ளது. மேலும் குழுவால் பெறப்பட்ட விதிமுறைகளின்படி, மாணவர்கள் வழிநடத்தப்பட வேண்டும் என்று ஜெயபிரகாஷ் காந்தி கூறினார்.

இதையும் படிங்க | ஆண்களையும் பாதிக்கும் மார்பகப் புற்றுநோய்- தெரிந்துகொள்ள வேண்டியவை!

இதனிடையே, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பைத் தொடர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த திங்கள் கிழமை கடிதம் எழுதினார்.
Published by:Archana R
First published:

Tags: Medical Students, Russia - Ukraine, Tamil Nadu

அடுத்த செய்தி