”இன்சூரன்ஸ் திட்டத்தில் தமிழகம் முன்னோடி” - இங்கிலாந்து எம்.பிக்கள் மத்தியில் முதல்வர் பழனிசாமி பெருமிதம்

ஒரு கோடியே 58 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Web Desk | news18-tamil
Updated: August 30, 2019, 10:20 PM IST
”இன்சூரன்ஸ் திட்டத்தில் தமிழகம் முன்னோடி” - இங்கிலாந்து எம்.பிக்கள் மத்தியில் முதல்வர் பழனிசாமி பெருமிதம்
முதல்வர் பழனிசாமி உரை
Web Desk | news18-tamil
Updated: August 30, 2019, 10:20 PM IST
மருத்துவக் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக பிரிட்டன் எம்.பி.க்கள் முன்னிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதற்கட்டமாக லண்டன் சென்ற முதல்வர் முன்னிலையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணித்தர மேம்பாடுகளை அதிகரிக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் தொடங்குவது ஆகிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.


இதனைதொடர்ந்து இன்று காலை பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த முதலமைச்சர், அந்நாட்டு எம்.பி.க்களை சந்தித்து பேசினார்.  அப்போது, இந்தியாவில் சிறந்த மருத்துவர்களையும், செவிலியர்களையும் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாக பெருமையுடன் குறிப்பிட்டார்.தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளில், பல நோய்களுக்கு இலவசமாக சிகிச்சைகள் வழங்கப்படுகிறது என்றும்,  ஒரு கோடியே 58 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆயிரத்து 27 நோய்களுக்கு சிகிச்சை பெற முடியும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.மேலும், இங்கிலாந்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவ தொழில்நுட்பங்களை தமிழகத்திலும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

Also Watch : லண்டனில் கோட் சூட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

First published: August 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...