கொரோனா சோகம்: அன்புக்குரியவர்களின் உடல்களோடு 4 நாட்கள் வரை சாலையில் காத்திருக்கும் ஈக்வடார் மக்கள்..!

அதிக உயிரிழப்புகள் தொடர்ந்து வருவதாகவும், அரசு சரியான இறப்பு விகிதத்தைத் தெரிவிப்பதில்லை என்னும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

கொரோனா சோகம்: அன்புக்குரியவர்களின் உடல்களோடு 4 நாட்கள் வரை சாலையில் காத்திருக்கும் ஈக்வடார் மக்கள்..!
ஈக்வடார்
  • Share this:
மருத்துவமனை வசதிக் குறைவாலும், தொடர்ந்து வரும் அதிக உயிரிழப்பாலும் ஈக்வடார் குடியரசில் மக்கள் பலர் உயிரிழக்கிறார்கள். தங்கள் குடும்பத்தினரின் உடலை அடக்கம் செய்வதற்காக அதிகாரிகளின் அனுமதிக்காக மக்கள் 4 நாட்கள் வரை தெருவில் காத்திருக்கும் அவலம் நடந்துள்ளது.

20 மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட நாடு, தென் அமெரிக்காவின் வடமேற்கு ஓரத்தில் அமைந்துள்ள ஒரு குடியரசு நாடு ஈக்குவேடார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,465 ஆக உள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

உடலை அடக்கம் செய்ய நாட்கணக்கில் காத்திருக்கும் ஈக்வடார் மக்கள்பின்னடைவு ஏற்பட்ட பொருளாதாரத்திலும், மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாகவும் இருக்கும் ஈக்வடாரில் கொரோனா பாதிப்பு அனைத்தையும் தலைகீழாக்கியுள்ளது. ஈக்குவேடாரில் மருத்துவமனைகள் மிகக் குறைவு என்பதால் அதற்குள் அனைத்துப் படுக்கைகளும் தீர்ந்து, அதிக உயிரிழப்புகள் தொடர்ந்து வருவதாகவும், அரசு சரியான இறப்பு விகிதத்தைத் தெரிவிப்பதில்லை என்னும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.


”வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இறந்துவிடும் அன்புக்குரியவர்கள் நாங்கள் 4 நாட்கள் வரை வைத்திருந்து அதன் பிறகு அடக்கம் செய்கிறோம். அதிகாரிகள் சொல்லும் வரை உடலை வைத்துக்கொண்டு காத்திருக்கிறோம். சாலையில் உடலைக் கொண்டு வந்து வைத்து நாட்கணக்கில் அடக்கத்துக்காக காத்திருக்கிறோம்” என அந்நாட்டைச் சேர்ந்தவர் தெரிவிப்பதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.ஈக்வடாரின் கியாகுவில் நகர மேயர் சிந்தியா விட்டேரி, ”கல்லறைகள் உருவாக்கப்படும் வரை இறந்தவர்களின் உடல்கள் 12 குளிர் கலனுக்குள் வைக்கப்படும். துறைமுக நகரில் உள்ள தனியார் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டும் வருகிறது. ஒரு நாளுக்கு 100-க்கும் மேற்பட்ட உடல்கள் வரை குளிர்கலனில் வைக்கப்படுகின்றன” எனத் தெரிவிப்பதாக அந்நாட்டு செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading