ஜூலியன் அசாஞ்சேவின் நிபந்தனைகள் ஏற்பு! உயிருக்கு உத்ரவாதம் அளித்த பிரிட்டன்

ஜூலியன் அசாஞ்சே இனி லண்டனில் உள்ள ஈக்வேடார் நாட்டு தூதரகத்திலிருந்து வெளியேறலாம் என ஈக்வேடார் நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: December 7, 2018, 11:47 AM IST
ஜூலியன் அசாஞ்சேவின் நிபந்தனைகள் ஏற்பு! உயிருக்கு உத்ரவாதம் அளித்த பிரிட்டன்
ஜூலியன் அசாஞ்சே இனி லண்டனில் உள்ள ஈக்வேடார் நாட்டு தூதரகத்திலிருந்து வெளியேறலாம் என ஈக்வேடார் நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
Web Desk | news18
Updated: December 7, 2018, 11:47 AM IST
பல ஆண்டுகளாக தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள ‘விக்கிலீக்ஸ்’ ஜூலியன் அசாஞ்சேவின் நிபந்தனைகள் ஏற்கப்பட்டுள்ளன என ஈக்வேடார் அதிபர் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அரசின் ரகசிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களையும் பல சர்வதேச நிறுவனங்களின் சட்டவிரோத ரகசியங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. ‘இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸம்’ என விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் கோடிக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளார் அசாஞ்சே.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே அரசு, அரசு சரா நிறுவனங்கள், அமெரிக்க ராணுவம் என பல ரகசிய ஆவணங்களை வெளியிட அவரைக் கைது செய்யத் தயாரானது அமெரிக்கா. ஆனால், லண்டனில் இருந்த அசாஞ்சே உடனடியாக லண்டனில் உள்ள ஈக்வேடார் என்னும் லத்தீன் அமெரிக்க நாட்டின் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.

பல ஆண்டுகளாக லண்டனில் உள்ள ஈக்வேடார் நாட்டு  தூதரகத்திலேயே வாழ்ந்து வந்த அசேஞ்சேவுக்கு தற்போது விடுதலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவே கூறப்படுகிறது. ஈக்வேடார் நாட்டு தூதரகத்தை விட்டு வெளியேறினால் பிரிட்டன் அரசு மூலம் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படும் சூழல் அசாஞ்சேவுக்கு இருந்தது.

ஆனால், தற்போது ஈக்வேடார் நாட்டு அதிபர் லெனின் மொரெனோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜுலியன் அசாஞ்சேவின் நிபந்தனைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அசாஞ்சேவின் உயிருக்கு ஆபத்து நேரும் சூழல் உள்ள எந்த நாட்டுக்கும் அசாஞ்சே நாடு கடத்தப்பட மாட்டார் என பிரிட்டன் உறுதி அளித்துள்ளது. இதனால், லண்டனில் உள்ள ஈக்வேடார் தூதரகத்திலிருந்து அசாஞ்சே வெளியேறலாம். ஆறு ஆண்டுகள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: கைதி உயிரிழப்பு: போலீசார் மீது கடுமையான தாக்குதல்
First published: December 7, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்