Home /News /international /

பொருளாதார நெருக்கடி: இலங்கையில் ஒரே நாளில் 119.08 பில்லியன் ரூபாய் அச்சடிப்பு!

பொருளாதார நெருக்கடி: இலங்கையில் ஒரே நாளில் 119.08 பில்லியன் ரூபாய் அச்சடிப்பு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்த ஆண்டில் இதுவரை 432.76 பில்லியன் ரூபாய் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் கையில் இருக்கும் தங்கத்தின் இருப்பை பொறுத்தே கரன்சியை அச்சிட முடியும். ஆனால், இலங்கையில் ஒரே நாளில் இவ்வளவு அதிக தொகை அச்சிடப்பட்டுள்ளது.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடந்த புதன் அன்று ஒரே நாளில் 119.08 பில்லியன் ரூபாய் அச்சடிக்கப்பட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்தா ராஜபக்சேவும் பதவிவிலகக் கோரி, நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனினும் பதவி விலக போவதில்லை என அவர்கள் உறுதியாக உள்ளனர்.

    இதனால் இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள், பேரணிகள் போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இதனிடையே பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்கும் விதமாக இலங்கையில் கடந்த புதனன்று ஒரே நாளில்  119.08 பில்லியன் ரூபாய் அச்சடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த ஆண்டில் ஒரே நாளில் அச்சடிக்கப்பட்ட அதிக தொகை இதுவாகும்.

    மேலும் படிக்க: முத்தமிட, கட்டியணைக்க தடை... கொரோனா பரவலை தொடர்ந்து சீனாவில் அதிரடி ரூல்ஸ்...


    இதன் மூலம், இந்த ஆண்டில் இதுவரை 432.76 பில்லியன் ரூபாய் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் கையில் இருக்கும் தங்கத்தின் இருப்பை பொறுத்தே கரன்சியை அச்சிட முடியும். ஆனால், இலங்கையில் ஒரே நாளில் இவ்வளவு அதிக தொகை அச்சிடப்பட்டுள்ளது. அதிக தொகை அச்சடிக்கப்பட்ட போதிலும், நிதியமைச்சரும், மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் அச்சடிக்கப்படும் இடத்தில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Srilanka

    அடுத்த செய்தி