Home /News /international /

தென் ஆப்பிரிக்காவில் எபோலா தொற்று? - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

தென் ஆப்பிரிக்காவில் எபோலா தொற்று? - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

காங்கோ நாட்டில் எபோலா தொற்றுக்கான அறிகுறி

காங்கோ நாட்டில் எபோலா தொற்றுக்கான அறிகுறி

காங்கோ நாட்டில் எபோலா தொற்றுக்கான அறிகுறி தென்பட்ட காரணத்தினால் உலக சுகாதார அமைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • International , IndiaDemocratic republic of Congo Democratic republic of Congo Democratic republic of Congo Democratic republic of Congo
    தென் ஆப்பிரிக்கா கண்டத்தில் காங்கோ நாட்டில் உள்ள வடக்கு கிவு பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று எபோலா தொற்று நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அதற்கான தீவிரமான விசாரணையை உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

    ஆகஸ்ட் 15ம் நாள் வடக்கு கிவுவில் உள்ள போனி என்ற பகுதியில் 46 வயதான பெண்மணி இறந்துள்ளார். அந்த பகுதி மருத்துவமனையில் அவர் இறந்த நிலையில் எபோலா நோய்க்கான அறிகுறி அவர் உடலில் தென்பட்டதாகக் கூறப்படுகின்றது. எனவே அவரின் மரணம் எபோலா வைரஸ் தொற்றின் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்று சந்தேகத்துடன் தற்போது தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Also Read : இந்திய அரசியல் தலைவரை கொல்ல முயற்சி - ரஷ்ய புலனாய்வு அமைப்பினரிடம் பிடிபட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி!

    உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலில் காங்கோ நாட்டில் தேசிய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தேவையான மாதிரிகளைக் கொண்டு சோதனை நடத்தி வருகிறது என்று கூறியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலைமையை எதிர்கொள்ளத் தேவையான வசதிகள் மற்றும் இறந்த நபருக்கு நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களிடம் சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

    மேலும் எபோலா நோய்த் தொற்று குறித்து தேவையான விழிப்புணர்வுகளை அந்த பகுதி மக்களுக்கு ஏற்படுத்துவதாகவும், சிகிச்சை தேவைப்படும் மக்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

    எபோலா நோய் என்பது எபோலா என்ற வைரஸ் மூலம் வரும் நோய். இது தொற்று நோய் என்ற காரணத்தினால் இதனில் வீரியம் அதிகமாக இருக்கும். வரலாற்றில் இந்த நோயின் காரணமாக ஏராளமானவர்கள் இறந்த நிலையில் இதற்கான சிகிச்சை வழிகாட்டுதல்கள் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
    Published by:Janvi
    First published:

    அடுத்த செய்தி