ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு.. லேசான சுனாமி எழும்பியதாக தகவல்

நிலநடுக்கம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவானதை அடுத்து அங்கு லேசான சுனாமி அலைகளும் எழும்பின.

 • Share this:
  ஜப்பானின் வடகிழக்கில் உள்ள மியாகி மாகாணத்தின் கடலோரத்தில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 6.26 மணிக்கு நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.2 ஆக பதிவானது. நிலநடுக்கத்தை அடுத்து கட்டிடங்கள் குலுங்கின. ஒனகாவா என்ற இடத்தில் இயங்கி வரும் அணுமின் நிலைய செயல்பாடுகள் அவசரமாக நிறுத்தப்பட்டன. மியாகி மாகாணத்தில் பதிவான நிலநடுக்கம் தலைநகர் டோக்யோவிலும் உணரப்பட்டது.

  மியாக்கியில் நிலநடுக்கத்தை அடுத்து லேசான சுனாமி அலைகளும் எழும்பின. மியாகி மாகாணத்தில் வழக்கத்தை விட கடல் அலைகள்  ஒரு மீட்டர் உயரமாக எழும்பின. மேலும் சுனாமி அலைகள் எழும் என்ற அச்சத்தில் வட்டாரி, குரிஹாரா ஆகிய இடங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், கட்டிட சோதங்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகளும் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  மேலும் படிக்க... பிரான்சிஸில் மீண்டும் ஊரடங்கு - 3வது அலை கொரோனா தொற்று பரவுகிறதா?  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Vaijayanthi S
  First published: