முகப்பு /செய்தி /உலகம் / நியூசிலாந்தில் நிலநடுக்கம்.. புயலைத் தொடர்ந்து வந்த பூகம்பம்.. விடாது துரத்தும் சோகம்..!

நியூசிலாந்தில் நிலநடுக்கம்.. புயலைத் தொடர்ந்து வந்த பூகம்பம்.. விடாது துரத்தும் சோகம்..!

நியூசிலாந்து நிலநடுக்கம்

நியூசிலாந்து நிலநடுக்கம்

கேப்ரியல் புயல் ஏற்படுத்திய அழிவில் இருந்து மீளாத நிலையில், நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaNew Zealand

துருக்கி மற்றும் சிரியாவை மையமாக வைத்து கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகையே அதிரச் செய்தது. கட்டடங்கள் உடைந்து நொறுங்கிய நிலையில், அதில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை நிலநடுக்கத்தில் சிக்கி 40,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நியூசிலாந்தில் உள்ள வடமேற்கு ஓபல் ஹட் பகுதியில் இருந்து 78 கி.மீயை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் நியூசிலாந்து மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 10 முதல் 20 விநாடிகள் வரை நிலம் அதிர்ந்ததை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர். சேதம் குறித்த விவரங்கள் எதுவும் உடனடியாக தெரியவராத நிலையில், நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

முன்னதாக நியூசிலாந்தில் கேப்ரியல் புயலின் கோர தாண்டவத்தால், அந்நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் நிலைக்கொண்டிருந்த கேப்ரியல் புயல், ஆக்லாந்தில் கரையை கடந்த போது, மணிக்கு சுமார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனை தொடர்ந்து பெய்த கனமழையால், நியூசிலாந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மின்சாரம், தொலைதொடர்பு சேவை மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியது. கடந்த நூறாண்டுகளில் இது போன்ற வெள்ள பாதிப்புகளை நியூசிலாந்து கண்டதில்லை என்று அந்நாட்டு பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை மீண்டும் கலக்கமடையச் செய்துள்ளது.

First published:

Tags: Earthquake, New Zealand