Earthquake : நேபாளத்தில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு..

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.

  • Share this:
    நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.

    நேபாளத்தில் இன்று அதிகாலை 5.42 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் காத்மாண்டு மாநிலைத்தில் உள்ள லம்ஜங் மாவட்டம் ஹல்ப்ஹலி என்ற பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்தியதரைக்கடல் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திடீர் நிலநடுக்கத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது. இத்தகவலை தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.



    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முதல்கட்ட தகவல்கள் இன்னும் வெளியாகியுள்ளன.



    அதேபோல், நேபாளத்தின் போக்ஹரா பகுதியில் இருந்து கிழக்கே 35 கிலோமீட்டர் தூரத்தை மையமாக கொண்டு  நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: