பாகிஸ்தானில் நிலநடுக்கம்! 19 பேர் உயிரிழப்பு; 300 பேர் காயம்

டெல்லி, சண்டிகர், டெஹ்ராடூன், காஷ்மீர் ஆகிய இந்திய நகரங்களிலும் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நிலநடுக்கம்! 19 பேர் உயிரிழப்பு; 300 பேர் காயம்
நிலநடுக்கம்
  • News18
  • Last Updated: September 24, 2019, 11:08 PM IST
  • Share this:
பாகிஸ்தான் வடக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் இஸ்லமாபாத் அருகில் ஜெஹ்லும் நகரிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலையில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் அதிர்வலை உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக, கட்டங்கள் குலுங்கின.

இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் வணிகவளாகங்களை விட்டுவெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். ஜெஹ்லும், மிர்புர் ஆகிய இரு ஊர்களுக்கு இடையிலான பகுதிகளில்தான் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பாகிஸ்தானில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். டெல்லி, சண்டிகர், டெஹ்ராடூன், காஷ்மீர் ஆகிய இந்திய நகரங்களிலும் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.


Also see:

First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading