கொரோனா மூன்றாவது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

மாதிரிப் படம்

கொரோனா மூன்றாவது அலையின் தொடக்க நிலையில் உலகம் உள்ளது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சீனாவின் ஊஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து திணறிவருகின்றன. கொரோனா முதல்அலை முடிந்து தன்னிலை அடைவதற்குள் இரண்டாவது அலை தாக்கியது. அதற்குள் உலக நாடுகள் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

  தற்போது, உலக நாடுகள் மெல்லமாக இயல்புநிலையை நோக்கிநகர்ந்துவருகின்றன. இந்தநிலையில், மூன்றாவது அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது. மூன்றாவது அலை குறித்து பேசிய டெட்ரோஸ் அதானம், ‘எதிர்பாராத விதமாக நாம் கொரோனா மூன்றாவது அலையின் தொடக்க நிலையில் இருக்கிறோம். உலகில், 111 நாடுகளில் அதிக வீரியமுள்ள 'டெல்டா' வைரஸ் பரவியுள்ளது. இது விரைவில் உலகெங்கும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் பரவும் கொரோனா திரிபாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

  ஐரோப்பிய நாடுகள் மற்றும் வடக்கு அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவது அதிகப்படுத்தப்பட்டதன் காரணமாக அங்கே கொரோனா பரவல் மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால், உலக நாடுகளில் இருக்கும் நிலை எதிர்நிலையில் உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உலக சுகாதார நிறுவனத்தின் ஆறில் ஒரு பிராந்தியத்தைத் தவிர மற்ற பிராந்தியங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து நான்காவது முறையாக கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. 10 வாரங்களாக தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தற்போது இறப்பும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
  Published by:Karthick S
  First published: