முகப்பு /செய்தி /உலகம் / ஒவ்வொரு இந்தியரும் ஆண்டுக்கு 5 கிலோ உணவை வீணாக்குகின்றனர் - ஐநா ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

ஒவ்வொரு இந்தியரும் ஆண்டுக்கு 5 கிலோ உணவை வீணாக்குகின்றனர் - ஐநா ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

மாதிரி படம்

மாதிரி படம்

இந்த ஆய்வறிக்கையில் கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச அளவில் சுமார் 931 மில்லியன் டன் அளவு உணவுகள் விரயமாக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ?

  • 1-MIN READ
  • Last Updated :

130 கோடிக்கும் அதிகம் மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் லட்சகணக்கானோர் 3 வேளை உணவு இல்லாமல் பசியில் வாடி வருகின்றனர். இந்த நிலையில் ஒவ்வொரு இந்தியரும் ஒரு வருடத்தில் சராசரியாக 5 கிலோ உணவை வீணாக்குவதாக கவலையளிக்கும் வகையில் புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக ‘உணவு விரயக் குறியீடு அறிக்கை 2021’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை ஐநா வெளியிட்டுள்ளது. சில்லறை விற்பனை நிலையங்கள், உணவகங்கள் மற்றும் வீடுகளில் ஏற்படும் உணவு விரயம் குறித்து இந்த அறிக்கை விரிவாக அலசியுள்ளது. உணவுகளை விரயமாக்குவதில் வீடுகள் தான் முதலிடம் வகிக்கின்றன.

வீடுகள் விநியோகச் சங்கிலியின் நுகர்வு கட்டத்தில் கிடைக்கும் மொத்த உணவில் 11% உணவை விரயமாக்குகின்றன. உணவு விடுதிகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் முறையே 5 சதவீதம் மற்றும் 2 சதவீத உணவை வீணடிக்கின்றன.

இந்த ஆய்வறிக்கையில் கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச அளவில் சுமார் 931 மில்லியன் டன் அளவு உணவுகள் விரயமாக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 931 மில்லியன் டன் உணவில் 60% உணவுகள் வீடுகளாலும், 26 சதவீத உணவுகள் உணவு விடுதிகளாலும், 13 சதவீத உணவுகள் சில்லறை விற்பனை மூலமும் விரயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வீட்டு உணவு விரயமாகும் அளவு ஆண்டுக்கு 68.7 மில்லியன் டன்களாக உள்ளது. அதே போல இந்தியாவில் தனி நபர் ஆண்டு ஒன்றுக்கு 50 கிலோ உணவை விரயம் செய்வதாகவும் ஐநா ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also read... பெருமூளை பாதிப்பு - சிகிச்சைக்கு தானே நிதி திரட்டிய 7 வயது சிறுமி!

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் அதன் கூட்டாளர் அமைப்பான WRAP ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில், 2019-ல் வீணாக்கப்பட்டுள்ள 931 மில்லியன் டன் உணவின் எடை என்பது தோராயமாக 23 மில்லியன் முழுமையாக லோட் செய்யப்பட்ட 40 டன் லாரிகளுக்கு சமம். மேலும் பூமியை ஏழு முறை வட்டமிட போதுமானது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் வீட்டு உணவு விரய மதிப்பீடு நபர் ஒருவர் ஆண்டுக்கு 50 கிலோ அல்லது ஆண்டுக்கு 68,760,163 டன்னாக உள்ளது. அமெரிக்காவில் தனி நபர் ஆண்டுக்கு 59 கிலோ உணவையும், சீனாவில் தனி நபர் ஆண்டுக்கு 64 கிலோ உணவையும் விரயமாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல உலகளாவிய தனிநபர் கணக்கீடு படி, ஆண்டுதோறும் 121 கிலோ நுகர்வோர் அளவிலான உணவு வீணடிக்கப்படுகிறது, இதில் 74 கிலோ உணவு விரயம் வீடுகளால் ஏற்படுகிறது என்றும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உணவு கழிவுகள் கணிசமான சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. உணவு விரயமாகும் அளவை குறைத்தால் மாசின் மூலம் இயற்கை பாதிப்படையும் வேகத்தை கட்டுப்படுத்தலாம். பசியின்மை குறையும் மேலும் உலகளாவிய மந்தநிலையின் போது பணத்தை மிச்சப்படுத்தும் என்றும அந்த அறிக்கை கூறுகிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Food, UN