உலகில் உள்ள வளர்ந்த நாடுகள் இந்தியாவை தங்கள் விரயப் பொருட்களின் குப்பைத் தொட்டியாக்கி வருகின்றன என்று சமூக ஆர்வலர்கள், சில ஊடகங்கள் சிறிது காலமாகவே கவலை வெளியிட்டு வருகின்றன.
வளர்ந்த உலக நாடுகள் தங்களின் உடைந்த மின்னணு கழிவுகளான, கணினிகள், லேப்டாப்கள், டெலிபோன்கள், டெலிவிஷன்கள் ஆகியவற்றின் உடைந்த குப்பைகளை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் கொண்டு வந்து கொட்டுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
வளர்ந்த நாடுகள் வளர்ந்து வரும் மற்றும் வளராத நாடுகளை தங்களின் குப்பைகளைக் கொட்டும் நாடுகளாக மாற்றியுள்ளனவா என்று பொறுப்பார்ந்த பத்திரிகைகள் சில கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த குப்பைகள் இந்தியாவின் நிலம், தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழலை பாதித்து இந்திய மக்களையும் பல்வேறு விதங்களில் பாதித்து வருகிறது.
உலகின் 90% மின்னணு கழிவுகள் சட்ட விரோதமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன, அல்லது சட்ட விரோதமாக வேறொரு நாட்டில் கொண்டு கொட்டப்படுகின்றன. இந்த குப்பைக் கழிவுகள் பெரும்பாலும் இந்தியாவில் முடிகின்றன. ஆசியாவில் சீனா, ஹாங்காங், பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகளே இந்தக் கழிவுகள் நிரப்பப்படும் இடமாக உள்ளது.
இப்படிக் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதில் முதலிடம் வகிப்பது மேற்கு ஐரோப்பிய நாடுகள் என்று தெரிகிறது. மின்னணு கழிவுகள் எப்படி அகற்றப்படுகின்றன என்பது பற்றி எந்த ஒரு ஆவணமும் இல்லை, சட்டவிரோத வர்த்தகமாகவே இது மாறிவிட்டதாக சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன . ஈ-வேஸ்ட்கள் என்று அழைக்கப்படும் இந்த மின்னணு கழிவுகள் சட்ட விரோத கடல் மார்க்கமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது.
புள்ளி விவரங்களின்படி ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த ஒரு நபர் ஆண்டு ஒன்றுக்கு 17.7 கிலோ மின்னணுக் கழிவுகளை உற்பத்தி செய்கிறார். சுமார் 1.3 மில்லியன் டனக்ள் மின்னணுக் கழிவுகள் ஆவணப்படுத்தப்படாமலேயே அப்புறப்படுத்தப்படுகின்றன. இதில் பெரும்பங்கு இந்தியாவில் வந்து முடிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வளர்ந்த நாடுகள் இந்தியாவை குப்பைக் கழிவு கொட்டும் இடமாகவே கருதுவதாக சுற்றுச்சூழல் உலக அமைப்புகள் கூறி வருகின்றன.
மற்ற சாதாரண குப்பைகளைக் கையாள்வதைப் போல் மின்னணு கழிவுகளைக் கையாளக் கூடாது இதை முறையாக மறு சுழற்சி செய்வது அவசியம். மின்னணுப் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் உட்பொருட்கள் உள்ளன. நம் ஸ்மார்ட் போனில் என்னென்ன இருக்கின்றன, இரும்பு, காரீயம், காப்பர், கோபால்ட், சிலிகான், மெர்குரி ஆகியவை உள்ளன, இதனை மறு சுழற்சி செய்து பயன்படுத்த முடியும் ஆனால் இது நடப்பதில்லை. கானாவில் கொட்டப்படும் இத்தகைய கழிவுப்பொருட்கள் டம்ப் யார்டில் நிரம்பியிருக்கின்றன, அதனை அங்குள்ளவர்கள் எரிப்பதால் பலவிதமான புரியாத நோய்கள் ஏற்படுகின்றன, நுரையீரல் பாதிப்பு முதல் சரும நோய்கள், புற்று நோய் வரை அனைத்தும் ஏற்படுவதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேற்கத்திய நாடுகளின் மின்னணு கழிவுகளில் 35% கழிவுகள் மட்டுமே முறையாகக் கையாளப்பட்டு டம்ப் செய்யப்படுகின்றன, மீதி 65% கழிவுகள் வளரும் நாடுகளிலும் வளராத நாடுகளிலும் சட்ட விரோதமாகக் கொட்டப்படுகின்றன என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.