Home /News /international /

திவாலாகும் இலங்கை அரசு.. ஸ்தம்பித்த பொருளாதாரம் - மகிந்த ராஜபக்சே பதவி விலகல்?

திவாலாகும் இலங்கை அரசு.. ஸ்தம்பித்த பொருளாதாரம் - மகிந்த ராஜபக்சே பதவி விலகல்?

Mahinda Rajapaksa

Mahinda Rajapaksa

உலக வங்கியின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து வறுமையின் பிடியில் சிக்கிய தனிநபர்களின் எண்ணிக்கை 11.7 சதவீதம் அல்லது அரை மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  இலங்கை பொருளாதாரம் கொரோனாவால் ஸ்தம்பித்துள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

  சுற்றுலாவை பெரிதாக நம்பியிருக்கும் அண்டை நாடான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து சமீபத்தில் உலக வங்கி வெளிட்ட தரவுகளின்படி, வேலை மற்றும் வருவாய் இழப்புகள், கணிசமான உணவுப் பணவீக்கம் மற்றும் நாட்டின் பணவீக்கம் ஆகியவற்றின் விளைவாக இலங்கை தீவிர பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

  உலக வங்கியின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து வறுமையின் பிடியில் சிக்கிய தனிநபர்களின் எண்ணிக்கை 11.7 சதவீதம் அல்லது அரை மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

  Also read:  பாட்டியின் காதலனால் 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை!

  இலங்கையில் பணவீக்கம் நவம்பரில் 11.1 சதவீதத்தை எட்டியது மற்றும் இந்த விலைவாசி உயர்வானது, முன்பு நன்றாக இருந்தவர்களை தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க சிரமப்பட வைத்துள்ளது. அதே சமயம் அத்யாவசிய தேவையான உணவுப் பொருட்கள் கூட இப்போது பலருக்குக் கட்டுப்படியாகாததாக மாறியிருக்கிறது. இலங்கை பொருளாதாரம் அவசரநிலையில் இருப்பதாக பிரதமர் ராஜபக்ச அறிவித்துள்ளார். அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அரசு நிர்ணயித்த விலையில் விற்கப்படுவதை உறுதி செய்ய ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது, ஆனால் மக்களின் துயரங்களைக் குறைக்க அது சிறிதளவும் பயனளிக்கவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.

  Also read:  முஸ்லிம் மாணவர்கள் சூரிய நமஸ்காரத்தில் பங்கேற்கக் கூடாது - இஸ்லாமிய அமைப்பு

  மகிந்த ராஜபக்ச ராஜினாமா?

  இதற்கிடையே கடந்த இரண்டு தினங்களாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அவருக்கு பதிலாக பிரதமர் பொறுப்புக்கு கொண்டுவரப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறின.

  இருப்பினும் இந்த தகவல்களை இலங்கை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலக எவ்வித திட்டமும் வைத்திருக்கவில்லை. இது போன்ற தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நான் வன்மையாக நிராகரிக்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also read:  கொரோனாவால் 3 பேர் பாதிப்பு - 1.2 மில்லியன் மக்கள் வசிக்கும் நகருக்கு முழு ஊரடங்கு போட்ட சீனா!

  இலங்கை சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து அதிக அளவில் கடன் பெற்றிருக்கிறது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையை கருதினால் இந்த ஆண்டிற்குள் திவால் நிலையை இலங்கை தொட்டுவிடும் என்பது சர்வதேச நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
  Published by:Arun
  First published:

  Tags: Economy, Srilanka, World Bank

  அடுத்த செய்தி