ஆஸ்திரேலியாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் இருந்து தப்பிய நபர் கொரோனா காரணமாக போலீசில் சரண் அடைந்தார்.
யூகோஸ்லாவியா நாட்டில் பிறந்த டார்கோ "டக்கி" டெசிக் என்பவருக்கு (Darko “Dougie” Desic ) கஞ்சா வளர்த்த குற்றத்திற்காக மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள கிராப்டன் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி சிறையில் இருந்து அவர் தப்பினார். அப்போது அவர் 13 மாதங்கள் மட்டுமே சிறை தண்டனை அனுபவித்திருந்தார்.
அவரை கண்டுபிடிக்க மாபெரும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. எனினும் அவர் இருக்கும் இடத்தை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், 29 ஆண்டுகள் நிலையில் அவர் காவல் நிலையத்திலேயே மீண்டும் சரண் அடைந்துள்ளார். அவர் சரண் அடைந்ததற்கு கொரோனா தொற்று காரணமாக கூறப்படுகிறது.
சிறையில் இருந்து தப்பிய அவர் சிட்னி நகருக்கு தப்பி சென்றார். அவர் பற்றி தொலைக்காட்சியில் எல்லாம் சீரிஸ் வெளியானதால் அனைவரிடம் இருந்தும் விலகியே இருந்தார். சிட்னியில் கட்டிடம் கட்டுபவர் மற்றும் கைவினை கவிஞராக பணியாற்றி தனது தேவைகளை பூர்த்தி செய்துள்ளார். யாரிடமும் பேசாத அவர், லைசன்ஸ் பெறுவதில் சிக்கல் இருப்பதால் எங்கு சென்றாலும் நடந்தே செல்வார். தனது அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்பதால் 29 வருடங்களாக மருத்துவமனைக்கு கூட அவர் சென்றதில்லை.
இதையும் படிங்க: வீடுகளுக்குள் புகுந்த எரிமலைக் குழம்பு: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!
கொரோனா தொற்று ஆஸ்திரேலியாவில் பரவத் தொடங்கியதையடுத்து டார்கோ "டக்கி" டெசிக்கிற்கு பிரச்சனை ஆரம்பமானது. கொரோனாவால் வேலை பாதிக்கப்பட்டது, வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியவில்லை. இதையடுத்து வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். பின்னர், கடற்கரையில் படுத்து உறங்க தொடங்கினார் டார்கோ "டக்கி" டெசிக். வீடு இல்லாமல் கடற்கரையில் படுத்து உறங்குவதை விட சிறையில் இருப்பது மேல் என்று எண்ணத் தொடங்கிய அவர், காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

டார்கோ "டக்கி" டெசிக்
பின்னர் டார்கோ "டக்கி" டெசிக் எண்ணியபடியே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் அவரை சுதந்தர மனிதராக பார்க்க வேண்டும் என்று அவர் வசித்த பகுதி மக்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். அவர் புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பதற்காக இதுவரை 25 ஆயிரம் அமெரிக்க டாலர் திரட்டப்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக வாதாட அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரும் அமர்த்தப்பட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.