ஐக்கிய அரபு அமீரக பிரதமரின் மகள் வீட்டு சிறையில் அடைப்பு!

ஐக்கிய அரபு அமீரக பிரதமரின் மகள் வீட்டு சிறையில் அடைப்பு!

ஷேகா லதிபா

கடல் மார்க்கமாக படகு ஒன்றில் தப்பிச் சென்ற போது கோவா அருகே இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.

  • Share this:
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தவுமின் மகளும் இளவரசியுமான ஷேகா லதிபா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசி ஷேகா லதிபா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிப்பது தொடர்பான தகவல்களை அவரது கழிவறையில் அவரே வீடியோவாக படம்பிடித்துள்ளார் இந்த வீடியோக்கள் நேற்று பிபிசி தொலைக்காட்சியில் Panorama” என்ற புலனாய்வு நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“நான் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன், இந்த வில்லாவை சிறையாக மாற்றியுள்ளனர். நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். நான் எப்போது விடுதலை செய்யப்படுவேன், நான் விடுவிக்கப்படும் போது நிலைமை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது .

நாளுக்கு நாள் என் நிலைமை மோசமடைந்து வருகிறது.” என பேசியுள்ளார்.

யார் இந்த ஷேகா லதிபா?

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், அந்நாட்டின் துணை அதிபராகவும் இருந்து வருபவர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தவும். இவரின் மகளும் அந்நாட்டின் இளவரசிகளுள் ஒருவருமான ஷேகா லதிபா, கடந்த 2018ம் ஆண்டு மார்ச்சில் எமிரேட்ஸில் இருந்து அவருடைய நண்பரும் உளவு அமைப்பை சேர்ந்தவருமான பிரான்சை சேர்ந்த Tiina Jauhiainen உடன் ஐக்கிய அரபு அமீரக எல்லையை காரில் கடந்து ஓமனுக்கு சென்றுள்ளார்.

பின்னர் இருவரும் அங்கிருந்து கடல் மார்க்கமாக படகு ஒன்றில் தப்பிச் சென்ற போது கோவா அருகே இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். அதே சமயம் Tiina Jauhiainenஐ விடுவித்தனர்.

இது தொடர்பாக ஒரு வீடியோவில் பேசியுள்ள லதிபா, தான் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நாடு கடத்தப்பட்டவுடன் Al-Awir மத்திய சிறையில் 3 மாதங்கள் அடைக்கப்பட்டிருப்பதாகவும், அதன் பின்னர் தான் இந்த வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார். உள்ளே 2 காவலர்களும், வெளியே 5 காவலர்களும் எப்போதும் பாதுகாப்புக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோக்கள் எப்போது எடுக்கப்பட்டது என சரியாக தெரியவில்லை, ஆனால் ஒராண்டுக்கு முன்னர் இருக்கலாம் என பிபிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் இந்த வீடியோக்களை லதிபாவின் நண்பர் Tiina Jauhiainen அனுப்பியதாகவும், சமீபத்தில் லதிபாவிடம் இருந்து வீடியோக்கள் வருவதில்லை அவருக்கு என்ன நேர்ந்தது என தெரியவில்லை என Tiina Jauhiainen கூறியதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

இளவரசி தொடர்பான சிறைவாச வீடியோக்கள் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக அரசு விளக்கம் ஏதும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
Published by:Arun
First published: