அதிவேகமாக கார் ஓட்டியவருக்கு ரூ.31 லட்சம் அபராதம்!

news18
Updated: August 9, 2018, 5:27 PM IST
அதிவேகமாக கார் ஓட்டியவருக்கு ரூ.31 லட்சம்  அபராதம்!
கோப்புப்படம்
news18
Updated: August 9, 2018, 5:27 PM IST
துபாய் என்றாலே மனதுக்கு ஞாபகம் வருவது வானுயர கட்டிடங்களும், விதியில் வலம் வரும் விலை உயர்ந்த சூப்பர் கார்களும்தான். துபாய் காவல் துறையினருக்கு கூட புகாட்டி, லம்போர்கினி என அதிவேக கார்கள் துபாய் அரசால் வழங்கப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் லம்போர்கினி காரை கார்களை வாடகைக்கு விடும் ஒரு நிறுவனத்திலிருந்து 2 நாட்களுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு (இந்திய மதிப்பில்) வாடகைக்கு எடுத்துள்ளார். இரண்டாம் நாள் அதிவேகமாகக் காரை ஓட்டிச் சென்ற அந்த சுற்றுலாப் பயணி காரை 360 கோணத்துக்குச் சுற்றி ‘ஸ்பின்’ என்ற சாகசம் வேறு செய்துள்ளார். இது சாலைகளில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவானது.

துபாயின் ஷேக் சையது மற்றும் கார்ன் அல் சப்கா உள்ளிட்ட சாலைகளில் 125 கி.மீ முதல் 230 கி.மீ வேகத்தில் அவர் லம்போர்கினி காரை ஓட்டியுள்ளார். இதனால் அவரை தேடிப் பிடித்த துபாய் போலீசார், அந்த காரை வாடகைக்கு விட்ட நிறுவனத்தின் பேரில் 31 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 31 லட்ச ரூபாய் அபராத பணத்தை, சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணி செலுத்த மறுத்ததால், காரை வாடகைக்கு விட்ட அந்நிறுவனம் அவரது பாஸ்போர்ட்டை கைப்பற்றி வைத்திருக்கிறது. மேலும் இது குறித்து இங்கிலாந்து தூதரகத்தை தொடர்பு கொண்டு தகவலும் தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட்டை கொடுக்கும் வரை காரை ஒப்படைக்க முடியாது என அந்த சுற்றுலாப் பயணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். துபாய் வரலாற்றிலேயே வேகமாக கார் ஓட்டிய குற்றத்துக்காக 31 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
First published: August 9, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...