ஹோம் /நியூஸ் /உலகம் /

ரூ.70 கோடிக்கு ஏலம் போன கார் நம்பர் பிளேட்.. அப்படி என்ன ஸ்பெஷல் நம்பர்?

ரூ.70 கோடிக்கு ஏலம் போன கார் நம்பர் பிளேட்.. அப்படி என்ன ஸ்பெஷல் நம்பர்?

கோப்பு படம்

கோப்பு படம்

Number Plate: துபாய் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் காரின் நம்பர் பிளேட் எண்ணை ரூ.70 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  துபாய் நாட்டில் 'Most Noble Numbers'என்ற பெயரில் வாகனங்கள் மற்றும் செல்போன்களுக்கான சிறப்பு எண்கள்(Fancy numbers) வழங்கும் ஏல நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் AA8 என்ற ஒற்றை இலக்க கார் பிளேட் நம்பர் ரூ.70 கோடி மதிப்பிற்கு ஏலம் சென்று சாதனை படைத்தது. உலகளவில் அதிக விலைக்கு ஏலம் போன கார் எண்கள் பட்டியலில் இது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு ஏலத்தில் AA9 என்ற எண் ரூ.79 கோடிக்கு விற்பனையானது.

  இந்த ஏலத்தில் கிடைத்த ரூ.70 கோடி தொகையை ஒன் பில்லியன் மீல்ஸ் என்ற தொண்டு நிறுவனத்திற்கு வழங்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 50 நாடுகளில் உள்ள 100 கோடி மக்களுக்கு உணவு வழங்கும் மாபெரும் தொண்டு திட்டமே இந்த ஒன் பில்லியன் மீல்ஸ் திட்டமாகும். இந்த ஏலத்தில் F55 என்ற கார் எண் ரூ.8.23 கோடிக்கும், V66 என்ற எண் ரூ.7.91 கோடிக்கும் விற்பனை ஆனது.

  இதையும் படிங்க: செக்ஸ் படங்களை ஆய்வு செய்ய படிப்பு... அமெரிக்க கல்லூரி வழங்குகிறது

  இந்தியாவிலும் கடந்த வாரம் பைக்கிற்கான நம்பர் பிளேட் எண்ணை ரூ.15 லட்சத்துக்கு வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹரியானா மாநிலம் சண்டிகரைச் சேர்ந்த பிரிஜி மோகன் என்பவர் தனது ரூ.71,000 மதிப்பிலான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் 0001 என்ற விஐபி எண்ணை நம்பர் பிளேட்டாக பெற்றுள்ளார்.

  ஹரியானா மாநில அரசின் வருவாயை அதிகரிக்க அரசே விஐபி எண்களை ஏலமிட்டு விற்பனை செய்வதாக அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் தான் மோகன் இந்த எண்ணை ரூ.15 லட்சம் செலவிட்டு வாங்கியுள்ளார். இந்த ஏலம் திட்டம் மூலம் ரூ.18 கோடி வருவாய் திரட்ட ஹரியானா அரசு திட்டமிட்டுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Dubai, துபாய்