முகப்பு /செய்தி /உலகம் / துபாயில் உள்ள இந்து கோவிலுக்கு அனைத்து மதத்தினருக்கும் அனுமதி : கோவில் நிர்வாகம் அறிவிப்பு

துபாயில் உள்ள இந்து கோவிலுக்கு அனைத்து மதத்தினருக்கும் அனுமதி : கோவில் நிர்வாகம் அறிவிப்பு

துபாயில் புதிய இந்து கோவில் திறப்பு

துபாயில் புதிய இந்து கோவில் திறப்பு

ஜெபல் அலி பகுதியில் பல தேவாலயங்கள் மற்றும் சீக்கிய குருத்வாரா உள்ள நிலையில், துபாயின் புதிய இந்து கோவில் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் துபாயில் வசிக்கும் இந்து மதத்தினரின் பல ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

துபாயில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலில் அனைத்து மாதத்தினருக்கும் அனுமதி உண்டு என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிந்தி குரு தர்பார் கோவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மிகப்பழைமான இந்து கோவில் ஆகும். இதனையடுத்து இந்த கோவிலின் விரிவாக்க வேலைகள் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று அனைத்து பணிகளும் நிறைவடைந்தன. துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த இந்து கோவில் நேற்று மாலை 5:30 மணிக்கு திறக்கப்பட்டது.

துபாயில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவில்

ஜெபல் அலி பகுதியில் பல தேவாலயங்கள் மற்றும் சீக்கிய குருத்வாரா உள்ள நிலையில், துபாயின் புதிய இந்து கோவில் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் துபாயில் வசிக்கும் இந்து மதத்தினரின் பல ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது.

Also Read: மியான்மரில் சிக்கி தவித்த தமிழர்கள் பத்திரமாக மீட்பு... இன்று சென்னை திரும்புகின்றனர்

இந்த நிலையில் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக இந்து கோவில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கோவிலுக்கு அனைத்து மதத்தினருக்கும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது .

புதிய இந்து கோவிலின் உள்புற படம்

அதன் அடிப்படையில் சுமார் 1000 முதல் 1200 பக்தர்கள் வழிபாடு செய்யலாம். துபாயின் புதிய இந்து கோவில் காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கூட்ட நெரிசலை தவிர்க்க பார்வையாளர்களுக்கு கோவில் நிர்வாகம் கியூஆர் குறியீடு அடிப்படையிலான முன்பதிவு முறையை செயல்படுத்தியுள்ளது.

First published:

Tags: Dubai, Hindu Temple