இந்திய மசூதிகளிலும் தாக்குதல் நடத்த வேண்டும் என பதிவிட்ட இளைஞரின் வேலை பறிபோனது!

இந்தியாவிலும் வெள்ளி தோறும் மசூதிகளில் தொழும் இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டும். அப்போது தான் புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்கள் ஆத்மா சாந்தியடையும் என இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

news18
Updated: March 21, 2019, 11:08 AM IST
இந்திய மசூதிகளிலும் தாக்குதல் நடத்த வேண்டும் என பதிவிட்ட இளைஞரின் வேலை பறிபோனது!
டிரான்ஸ்கார்ட் செக்யூரிட்டி நிறுவனம்
news18
Updated: March 21, 2019, 11:08 AM IST
நியூசிலாந்து க்றைஸ்ட்சர்ச் தாக்குதல் சம்பவம் போல இந்தியாவிலும் நடக்க வேண்டும் என ஃபேஸ்புக்கில் கமென்ட் பதிவிட்ட இளைஞரின் வேலை பறிபோனது.

நியூசிலாந்தின் க்றைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரு மசூதிகளில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 50 பேர் பலியாகினர். 48க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நியூசிலாந்தில் நடைபெற்ற தாக்குதலை போல இந்தியாவிலும் வெள்ளி தோறும் மசூதிகளில் தொழும் இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டும். அப்போது தான் புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்கள் ஆத்மா சாந்தியடையும் என இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

அவர், ஃபேக் ஐடியில் இருந்து பதிவிடுகிறார் என்றும் அவர் துபாய் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்கிறார் என்ற தகவலும் சமூக வலைதளத்தில் பரவ ஆரம்பித்தது.
துபாயில் உள்ள செக்யூரிட்டி நிறுவனமான டிரான்ஸ்கார்ட், நிறுவனத்தில் அந்த இளைஞர் வேலை செய்வதை உறுதி செய்த அந்நிறுவனம், அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

மேலும், துபாய் போலீசாரிடம் அந்த இளைஞர் குறித்த தகவலையும் அந்நிறுவனம் அளித்துள்ளது.

Also See..
Loading...
First published: March 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...