• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இரட்டை உலக சாதனை படைத்த இந்திய சிறுமி சுச்சேதாவுக்கு குளோபல் சைல்டு ப்ராடிஜி விருது..

இரட்டை உலக சாதனை படைத்த இந்திய சிறுமி சுச்சேதாவுக்கு குளோபல் சைல்டு ப்ராடிஜி விருது..

சுச்சேதா சதீஷ்

சுச்சேதா சதீஷ்

விருது நடனம், இசை, கலை, எழுத்து, நடிப்பு, மாடலிங், அறிவியல், புதுமை, விளையாட்டு என பல்வேறு பிரிவுகளில் உள்ள குழந்தைகளின் திறமையைக் கொண்டாடுகிறது.

  • Share this:
14 வயது துபாய் வாழ் இந்திய சிறுமி  சுச்சேதா, இசை நிகழ்ச்சியில் பெரும்பாலான மொழிகளில் பாடியதற்காகவும், ஒரு குழந்தையின் மிக நீண்ட நேரடி இசை கச்சேரியை நிகழ்த்தியதற்காகவும், "100 குளோபல் சைல்டு ப்ராடிஜி" விருதை வென்றுள்ளார் என கடந்த 8-ஆம் தேதி செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு விஷயங்களுக்கும் சிறுமி இரட்டை உலக சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கலீஜ் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டதாவது, "துபாய் இந்தியன் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர் சுச்சேதா சதீஷ் சுமார் 120 மொழிகளில் பாடும் திறமை படைத்தவர்" என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த பத்திரிகைக்கு பேட்டியளித்த சுச்சேதா கூறியதாவது, " ஒரு இசை நிகழ்ச்சியின் போது பெரும்பாலான மொழிகளில் பாடியதற்காகவும், ஒரு குழந்தையின் மிக நீண்ட நேரடி பாடல் கச்சேரியை நிகழ்த்தி காட்டியதற்காகவும் எனக்கு இரட்டை உலக சாதனை விருதுகள் கிடைத்தது. அதன் காரணமாக தற்போது குளோபல் சைல்டு ப்ராடிஜி விருதுக்கு நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார். 2 வருடங்களுக்கு முன்பு, அதாவது சுச்சேதாவுக்கு 12 வயது இருக்கும் போது துபாயில் உள்ள இந்திய தூதரக ஆடிட்டோரியத்தில் நடந்த கச்சேரியில், சிறுமி 6.15 மணி நேரத்திற்கு மேல் 102 மொழிகளில் பாடி சாதனை படைத்துள்ளார்.

இவர் சமீபத்தில் 'யா ஹபிபி' எனப்படும் ஆல்பத்தை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் நடிகர் உன்னி முகுந்தன் முன்னிலையில் வெளியிட்டார். இது இவரது இரண்டாவது ஆல்பம் ஆகும். இது குறித்து அவர் கூறியதாவது, "மாமங்கம் திரைப்படத்தின் விளம்பரத்திற்காக மம்முட்டி மற்றும் உன்னி முகுந்தன் துபாய்க்கு வந்திருந்தனர். அப்போது அவர்களை சந்தித்து எனது ஆல்பத்தை அவர்கள் முன்னிலையில் வெளியிட்டேன். அவர்கள் இருவரும் எனக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அந்த சமயம் நான் மேகத்தில் மிதப்பது போல் உணர்ந்தேன். நான் ஒவ்வொரு நாளும் இசைக்காக சிறிது நேரம் ஒதுக்கிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். கடவுளின் கிருபையால், என் படிப்பு பாதிக்காமல் இரண்டையும் என்னால் நிர்வகிக்க முடிந்தது" என்று கூறினார்.

100 குளோபல் சைல்டு ப்ராடிஜி விருதினை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் மற்றும் ஆஸ்கார் விருது பெற்ற இசை இயக்குனர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்த விருது நடனம், இசை, கலை, எழுத்து, நடிப்பு, மாடலிங், அறிவியல், புதுமை, விளையாட்டு என பல்வேறு பிரிவுகளில் உள்ள குழந்தைகளின் திறமையைக் கொண்டாடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Gunavathy
First published: