ஹோம் /நியூஸ் /உலகம் /

ரூ.33 கோடி ஜாக்பாட்..! துபாயில் வேலை செய்யும் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்

ரூ.33 கோடி ஜாக்பாட்..! துபாயில் வேலை செய்யும் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்

ரூ.33 கோடி லாட்டரி பரிசுபெற்ற அஜய்

ரூ.33 கோடி லாட்டரி பரிசுபெற்ற அஜய்

தெலங்கானாவைச் சேர்ந்த அஜய் வேலைக்காக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaDubai Dubai

பிழைப்புக்காக துபாய் நாட்டிற்கு சென்ற இந்தியருக்கு அவர் வாழ்வில் திருப்புமுனை ஏற்படும் விதமாக மாபெரும் லாட்டரி தொகை பரிசாக கிடைத்துள்ளது. தெலங்கானா மாநிலம் கரீம்நகர் அருகே உள்ள ஜக்தியால் பகுதியைச் சேர்ந்தவர் அஜய் ஓகுலா. கரீம்நகர் பகுதியை சேர்ந்த கணிசமானோர் அரபு நாடுகளில் வேலைக்கு செல்வது வழக்கம். அப்படித்தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அஜய் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார்.

அங்குள்ள நகைக்கடை ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வந்த அஜய்க்கு மாத வருமானம் அந்நாட்டின் மதிப்பின்படி, 3,200 திர்ஹாம். இந்நிலையில், சமீபத்தில் இவர் 15 மில்லியன் மதிப்பிலான துபாய் லாட்டரி பரிசு போட்டி டிக்கெட்டுகள் 2 வாங்கியுள்ளார். இவர் வாங்கிய லாட்டரி டிக்கெட் பரிசு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.33 கோடிக்கு அதிபதியானார் அஜய்.

தனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை இப்போது கூட நம்பமுடியவில்லை எனக் கூறும் அஜய், இதை ஊரில் உள்ள எனது அம்மா மற்றும் குடும்பத்தினரிடம் கூறிய போது அவர்களும் முதலில் நம்பவில்லை என்றார். இந்த செய்தி தற்போது புகைப்படங்களுடன் ஊடகங்களில் செய்தியாகவே வெளியாகியுள்ளது என்பதால் அவர்கள் நம்பித்தான் தீர வேண்டும் என மகிழ்ச்சியின் உச்சியில் தெரிவித்தார் அஜய்.

இதையும் படிங்க: நாட்டு நிலைமை சரியில்ல, பசங்கள வெளிநாட்டில் செட்டில் ஆக சொல்லிட்டேன் - முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு

பரிசு தொகையை கொண்டு முதலில் தனது கிராமத்தில் ஒரு வீடு கட்டப் போவதாக கூறும் அஜய், ஊரிலேயே கட்டுமான நிறுவனம் ஒன்றை அமைத்து தொழில் செய்யப்போவதாக கூறியுள்ளார். அதேபோல், இந்த தொகையில் ஒரு பகுதியை தனது கிராமம் மற்றும் பக்கத்து கிராமங்களின் மேம்பாட்டிற்கு உதவுவேன் என்றுள்ளார். மேலும், துாபயில் இருந்து கிளம்புவதற்கு முன்னாள் தனது குடும்பத்தினரை டிக்கெட் போட்டு கொடுத்து அங்கு சுற்றுலாவுக்கு அழைத்துள்ளார் அஜய்.

First published:

Tags: Dubai, Jackpot, Lottery