மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்... ஒரே நாளில் 114 பேர் சுட்டுக் கொலை..
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்... ஒரே நாளில் 114 பேர் சுட்டுக் கொலை..
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்... ஒரே நாளில் 114 பேரை சுட்டுக் கொலை..
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ,பச்சிளம் குழந்தைகள் உட்பட 114 பேர் ஒரே நாளில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி பெருவாரியான இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. இதனை ஏற்க மறுத்து அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவத்திற்கு எதிராக, பிப்ரவரி ஒன்று முதல் நாடு முழுவதும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இதுவரை நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில் மியான்மரில் ஆயுதப்படை தினமான நேற்றும், 44 நகரங்களில் மக்கள் வீதிக்கு வந்து ராணுவத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். சில இடங்களில் காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் கல்வீச்சும் நடந்தது.
பதிலடியாக, கண்ணீர் புகை குண்டுகளை வீசிய ராணுவத்தினர், தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர், போராட்டக்காரர்களின் தலை, பின்னங்கழுத்து போன்ற இடங்களில் சரமாரியாக சுட தொடங்கினர். வான் வழியாகவும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், பச்சிளம் குழந்தை, 13 வயது சிறுமி உள்ளிட்ட 114 பேர் நேற்று ஒரே நாளில் கொல்லப்பட்டு உள்ளனர். காயம்பட்ட ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களையும் ராணுவத்தினர் சரமாரியாக சுட்ட காட்சி வெளியாகியுள்ளது. ஆயுதப்படை தினமான நேற்று வெட்கக்கேடான நாள் என்று, மியான்மர் அமைச்சர்களால் உருவாக்கப்பட்ட போராட்ட குழு தெரிவித்துள்ளது. ராணுவத்தின் ஈவு, இரக்கமற்ற நடவடிக்கைக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.