• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பிரபாகரன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறிய டக்ளஸ் தேவானந்தா

பிரபாகரன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறிய டக்ளஸ் தேவானந்தா

டக்ளஸ் தேவானந்தா

டக்ளஸ் தேவானந்தா

விடுதலைப் புலிகள் ஆட்சியின் கீழ் இருந்தபோது யாரும் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருக்கவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

  • Share this:
    இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று பேசிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறினார். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

    இலங்கை நாடாளுமன்றத்தில் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பேசும்போது, தமிழர்கள் வாழ்ந்த/ வாழும் பிரதேசங்களில்  யுத்த காலத்தில் இறந்த மாவீரர்களை மக்கள் நினைவுக் கூர்ந்து விடுவார்கள் என்பதற்காக ஒவ்வொரு துயிலும் இல்லங்களுக்கு முன்பாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், 2009ம் ஆண்டுக்கு பின்னரே வடக்குப் பகுதியில் போதைப் பொருட்கள் அறிமுகமானது. 2009க்கு முன் கஞ்சா என்ற சொல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்தது இல்லை.  அந்த பகுதிகள் விடுதலைப் புலிகள் ஆட்சியின் கீழ் இருந்தபோது யாரும் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருக்க வில்லை என்று பேசினார்

    அப்போது குறிக்கிட்டு பேசிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய சிவஞானம் சிறீதரன், நான் அரசுக்கு வக்காளத்து வாங்கும் கையாளும் அல்ல பதவிக்காக ஆளும் தரப்பின் கால்களைக் கழுவி பிழைக்கவும் வரவில்லை. தமிழர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  நியாயமாக தீர்வை முன்வையுங்கள் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சாவின் விளிம்பில்.. கடைசி நேரத்தில் உயிர்த்தெழுந்த மூதாட்டி.. திரைப்படங்களை மிஞ்சும் கிளைமாக்ஸ்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: